ஜனவரி 2012 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஜனவரி 2012 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 26 ஜனவரி, 2012

வியாழன், 12 ஜனவரி, 2012


பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?


நமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டிகள் வழியாக வரலாம்.  ஆனால் விளம்பரங்கள் மற்றும் திரட்டிகளினால் வரும் வாசகர்களால் நமது வலைபதிவு/வலைதளத்தின்  Rank உயராது.  Search Engine வழியாக அதிக வாசகர்கள் வந்தால்தான் நமது வலைபதிவு/வலைதளத்தின் Rank உயரும்.  Search Engine 'களில் இணைத்து அதிக
வாசகர்களை பெற நமது வலைபதிவு அல்லது வலைதளத்தில் Metatag இணைக்க வேண்டும்.  இதை எப்படி இணைப்பது என பார்க்கலாம்.


முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML செல்லுங்கள்.

 பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

<head>

கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை Copy and Paste செய்யுங்கள். 

<b:include data='blog' name='all-head-content'/>

<b:if cond='data:blog.pageName == &quot;&quot;'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
</b:if>

<meta content='YOUR KEYWORDS HERE' name='keywords'/>

<meta content='YOUR DESCRIPTION HERE' name='description'/>

<meta content='http://YORU BLOG/SITE ADDRESS/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளதுதான் நமது TITLE TAG இது மிக அதிக வாசகர்கள் வருவதற்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலே நீல வண்ணத்தில் உள்ள YOUR KEYWORDS HERE என்ற இடத்தில் உங்கள் வலைதளத்திற்கு சம்பந்தமான சில சொற்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

YOUR KEYWORDS HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='கம்ப்யூட்டர், பிளாக்கர், tips, Computer, Share, blogger, widget' name='keywords'/>

YOUR DESCRIPTION HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='கம்ப்யூட்டர், பிளாக்கர் மற்றும் மொபைல் டிப்ஸ் பதிவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.' name='description'/>

 YORU BLOG/SITE ADDRESS என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='http://tamil-computer.blogspot.com/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

Metatag சரியாக இணைத்தீர்களா?

நன்றி


பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி?


நாம் பிளாக் ஆரம்பித்து நடத்திவரும் போது நமது Gmail Account திருடப்பட்டால்?, அல்லது பிளாக்கரில் சிறிய பிரச்சனை ஏற்ப்பட்டுவிட்டது என Google கை விரித்துவிட்டால்?  இன்னும் பல காரணங்கள் உள்ளது.   நாம் இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிளாக் ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.  அதற்காகதான் பிளாகர்
சில காலம் முன்பு பிளாக்கர் Backup வசதியை அறிமுகப்படுத்தியது இது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் நமது வலைபதிவில் உள்ள Posts, Template, Widgets என எல்லாவற்றையும் எப்படி BackUp எடுப்பது என்பதை பார்க்கலாம்.

Template Backup எடுப்பது எப்படி?
       Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Template 'ஐ Backup எடுத்து கொள்ளலாம்.

இதில் Widgets 'களும் சேர்த்து Backup  எடுக்கப்படும் என நமக்கு தெரியும்.  ஆனால் சில சமயங்களில் Widgets 'களில் Error செய்தி காட்டும் அதனால் இதை தனியாக Backup எடுத்துக் கொள்ளுங்கள்.


Posts Backup எடுப்பது எப்படி? 
       Dashboard ==> Settings ==> Export Blog ==> Download Blog என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Post 'களை Backup எடுத்துக் கொள்ளுங்கள். 

இதில் நீங்கள் சிரமப்பட்டு எழுதிய இடுக்கைகள் மற்றும் பல வாசகர்களின் கருத்துரைகள் Backup எடுக்கப்படுகிறது.


Widgets Backup எடுப்பது எப்படி?
        Dashboard ==>  Design சென்று ஒவ்வொரு Widget 'ஐ யும் தனித் தனியாக Edit செய்து வரும் கோடிங்கை Notepad, அல்லது Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் வார்த்தைகள் இருந்தால் Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள்.  பிளாக்கரில் Defult ஆக வரும் Widgets 'களை Backup எடுக்க தேவையில்லை.

நன்றி

Popular Posts

Facebook

Blog Archive