நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? இத படிங்க.... | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? இத படிங்க.... ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? இத படிங்க....

இதை படிப்பதால் உங்கள் வாழ்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம் ஐந்த நிமிடம் செலவிட்டு இதைப் படியுங்கள்.....

* உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

* வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

* பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய்.

* போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

* கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

*கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்).

* இணையத்தில் இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க,

ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?

நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் வீண் கவலைகளை விட்டு அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதைப் பொருட்கள் என்பவற்றை விட்டு நான் அதிர்ஷ்டசாலி என்ற மன தைரியத்தோடு இயன்றளவு மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மேலும் அழகானதாகவும் சிறந்ததாகவும் அமையும்.

நன்றி
@மண்வாசனை

Popular Posts

Facebook

Blog Archive