Memory Card உங்களது மெமரி கார்ட் போனில் Detect ஆகவில்லையா ? சரி செய்வது எப்படி? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Memory Card உங்களது மெமரி கார்ட் போனில் Detect ஆகவில்லையா ? சரி செய்வது எப்படி? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 26 மே, 2016

Memory Card உங்களது மெமரி கார்ட் போனில் Detect ஆகவில்லையா ? சரி செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களில் பாவிக்கப்படும் மெமரி கார்டுகள் எமக்கு பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. பொதுவாக ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் அனைவருமே தங்களுடைய ஸ்மார்ட் போனில் மெமரி கார்டு ஒன்றை நிறுவி இருக்கிறோம். எம்முடைய போனுடன் வரும் குறிப்பிட்ட அளவு மெமரியால் எம்முடைய அனைத்து தரவுகளையும் சேமித்து வைக்க முடியாது. ஆகவே பல்வேறு அளவுகளில் கிடைக்க கூட இந்த மெமரி கார்டு-களானது எம்முடைய தேவையை சரிவர நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது.

இவ்வாறு எமது ஸ்மார்ட் போனில் முக்கிய பங்கை வகிக்கும் இந்த மெமரி கார்டு-கள் பற்றியது தான் இன்றைய பதிவு.

சில வேளைகளில் எம்முடைய ஸ்மார்ட் போனில் குறிப்பிட்ட ஒரு மெமரி கார்டு-ஐ நிறுவும் போது குறிப்பிட்ட மெமரி கார்டு-ஐ ஸ்மார்ட் போனால் கண்டுபிடித்து கொள்ள முடியவில்லை என்ற பிழைச்செய்தி வரும்.

இவ்வாறு உங்களுடைய மெமரி கார்டு-ஐ ஸ்மார்ட் போன் Detect செய்ய முடியாத சந்தர்ப்பமொன்றில் எப்படி மெமரி கார்டு-ஐ சரி செய்து மறுபடியும் ஸ்மார்ட் போனில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்ய வைப்பது என்று பார்ப்போம்.


உங்களுடைய ஸ்மார்ட் போனை Off செய்து மெமரி கார்டு -ஐ போனில் இருந்து அகற்றுங்கள்.

இப்போது மெமரி கார்டு-ஐ கார்ட் ரீடர் ஒன்றின் மூலம் கணனியுடன் இணையுங்கள்.

உங்களது மெமரி கார்டு ரீடர் உங்களது கணனியில் தோன்றும் வரை காத்திருங்கள்.

மெமரி கார்டு-ஐ கணணி ஏற்றுக்கொண்டதும் My Computer-இற்கு சென்று மெமரி கார்டு-க்கான எழுத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

மெமரி கார்டு-ஐ கணனியில் இருந்து திறக்க முயற்ச்சிக்க வேண்டாம்.

அடுத்து உங்களது கணனியில் CMD-யை ஆரம்பியுங்கள்.

அதிலே கீழே காட்டி இருப்பது போல் டைப் செய்யுங்கள்.
chkdsk h: /r


உங்களுடைய மெமரி கார்டு-இன் எழுத்து, h என்பதுடன் replace செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

டைப் செய்த பின்னர் Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
இப்போது உங்களது மெமரி கார்டு -இல் Error செய்திகளை திருத்துவதட்கான ஸ்கேன் நடைபெறும்.

ஸ்கேன் முடிவடையும் வரை பொறுத்திருங்கள்.

Add caption

ஸ்கேன் முடிவடைந்த பின்னர் உங்களது மெமரி கார்டு-ஐ கணனியில் இருந்து அகற்றி மறுபடியும் உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி பாருங்கள். இப்போது உங்களுடைய மெமரி கார்டு ஆனது எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் ஸ்மார்ட் போனில் வேலை செய்யும்.

எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

Popular Posts

Facebook

Blog Archive