ஆகஸ்ட் 2016 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஆகஸ்ட் 2016 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

Do-not-clear-browser-cache-memory அடிக்கடி இணையத்தை பயன்படுத்துபவர்கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய Browser Cache Memory பற்றிய தகவல்

Browser Cache Memory என்றால் என்ன? 

உங்கள் கணனியில் உள்ள ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி நீங்கள் புதியதொரு இணையத்தளத்திற்கு பிரவேசித்த பின் மீண்டும் அதே தளத்திற்கு பிரவேசிக்கையில் குறிப்பிட்ட தளம் முன்னர் எடுத்துக் கொண்ட நேரத்தினையும் பார்க்க சற்று குறைந்த நேரத்தில் அதாவது வேகமாக திறக்கப்படுவதனை அவதானித்துள்ளீர்களா? இதற்கான காரணம் என்ன தெரியுமா?

நீங்கள் குறிப்பிட்ட ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி ஒரு இணையதளத்துக்கு பிரவேசிக்கையில் குறிப்பிட்ட தளத்தின் Logo, மற்றும் ஏனைய புகைப்படங்கள் மற்றும் கோப்புக்கள் போன்றன உங்கள் இணைய உலாவியின் மூலம் தானாக தரவிறக்கப்பட்டு தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றது. இதுவே "Temporary Internet Files" அல்லது Browser Cache Memory என அழைக்கப்படுகின்றது.

Browser Cache Memory இன் பயன் தான் என்ன?


முன்னர் பிரவேசித்த தளத்துக்கு நீங்கள் மீண்டும் செல்கையில் ஏற்கனவே தரவிறக்கப்பட்டு சேமிக்கப்பட்ட அவைகள் மீண்டும் தரவிரக்கப்படாமல் சேமிக்கப்பட்ட படங்கள் குறிப்பிட்ட இடத்துக்கு பிரதி செய்யப்படுகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட தளத்திற்கு எம்மால் மிகவேகமாக பிரவேசிக்க முடிவதுடன் எமது தரவுப்பாவனையும் கட்டுப்படுத்தப் படுகின்றது.

இணைய உலாவியில் சேமிக்கப்பட்ட இவைகளை பார்க்க முடியுமா?


ஆம், இவைகளை குறிப்பிட்ட இணைய உலாவியில் பார்க்க விரும்பினால் Firefox இணைய உலாவியில் about:cache என Address Bar இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக. Google Chrome இல் chrome://cache என Address Bar இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக.

சேமிக்கப்பட்ட இவைகள் இவைகள் நீக்கப்பட வழியுள்ளதா?


நாம் கணணியை பேணுவதற்காக பயன்படுத்தும் Ccleaner, Glary Utilities போன்ற மென்பொருள்கள் இந்த Cache Memory இல் இருக்கக் கூடிய கோப்புக்களையும் நீக்கி விடுகின்றது. எனவே நாம் இணையதளங்களுக்கு பிரவேசிக்கும் ஒவ்வொரு தடவையும் புதிதாக படங்கள் தரவிரக்கப்படுவதால் நமது தரவுப் பாவனையும் அதிகரிப்பதுடன் வேகமான இணைய உலாவளையும் மேற்கொள்ள முடிவதில்லை.

இவைகள் நீக்கப்படாமல் பாதுகாக்க முடியுமா?


எனவே நீங்கள் கணணியை பேணுவதற்காக பயன்படுத்தும் மென்பொருள்களில் Browser Cache Memory இனை தவிர்த்து ஏனையவைகளை மாத்திரம் நீக்கும் படி அமைத்திடலாம்.


Ccleaner மென்பொருள் பயன்படுத்துபவர் எனின்.

Browser Cache on ccleaner

  • நீங்கள் Ccleaner மென்பொருளை பயன்படுத்துபவர் எனின் குறிப்பிட்ட மென்பொருளை திறந்து Cleaner என்பதனை சுட்டி தரப்பட்டிருக்கும் இணைய உலாவிகளுக்குக் கீழே இருக்கும் Internet Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை மாத்திரம் நீக்கி விடுக.
  • அவ்வளவு தான். இனி உங்கள் Browser Cache Memory இல் உள்ள படங்கள் நீக்கப்படாது எனவே வேகமான இணைய அனுபவத்தினை பெற முடியும்.

Glary Utilities மென்பொருள் பயன்படுத்துபவர் எனின்.

 
Browser Cache on Glary utilities

  • இதனை Glary Utilities மென்பொருளில் மேற்கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட மென்பொருளின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் Menu என்பதனை சுட்டி Settings செல்க பின் திறக்கப்படும் சாளரத்தில் Temporary Files Cleaner என்பதனை சுட்டுக பின் Browser என்பதற்குக் கீழ் தரப்பட்டிருக்கும் Mozilla Firefox Cache, Google Chrome Cache, Opera Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக அவ்வளவு தான்.

அவ்வாறன்றி இது போன்ற தற்காலிக கோப்புக்களை நீக்க நீங்கள் மூன்றாம் நபர் மென்பொருளை பயன்படுத்தாமல் குறிப்பிட்ட இணைய உலாவியில் தரப்பட்டிருக்கும் வசதியை பயன்படுத்துபவர் எனின் இதனை Mozilla Firefox இல் மேற்கொள்ள பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

நீங்கள் Mozilla Firefox இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின்.

 
Browser Cache on Firefox

  • Firefox ====> Option சென்று Privacy எனும் Tab ஐ சுட்டுக.
  • பின் History என்பதற்குக் கீழ் You may want to clear your recent history, or remove individual cookies.  என்பதில் clear your recent history என்பதனை சுட்டுக.
  • இனி தோன்றும் சாளரத்தில் Details என்பதனை சுட்டி Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக.
  • அவ்வளவுதான்.

நீங்கள் Google Chrome இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின்.

  •  இதனை Google Chrome இணைய உலாவியில் மேற்கொள்ள குறிப்பிட்ட இணைய உலாவியின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் customize and control google chrome என்பதனை சுட்டி Tools ====> clear Browsing Data என்பதனை அலுத்துக அல்லது Ctrl+Shift+Del விசைகளை ஒரே நேரத்தில் அலுத்துக.
  • பின் தோன்றும் சாளரத்தில் Cached images and files என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக.

ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்


வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.
வாட்ஸ்அப்  forward
அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.


அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது.
மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இதனை கீழுள்ள  இணைப்பை பயன்படுத்தி APK மிர்ரர் தளத்தில் இருந்து இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.
இந்த வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகு. இருப்பினும் இதற்கான வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்வது எப்படி?

படி 1: முதலில் வாட்ஸ்அப் செயலியின் 2.16.230  எனும் பதிப்பை உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு தரவிறக்கிக் கொள்க.
படி 2: பின்னர் வழமைபோல் வாட்ஸ்அப் செயலியை திறந்து பலருக்கு அனுப்பவேண்டிய ஒரு செய்தியை தெரிவு செய்க.
படி 3: இனி Forward செய்வதற்கான பட்டனை அழுத்தியதன் பின்னர் ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்புவதற்கான வசதி தோன்றும்.
வாட்ஸ்அப்  forward
படி 4: பின்னர் அதன் மூலம் தேவையான நபர்களையும் குழுக்களையும் தெரிவு செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு அந்த செய்தியை அனுப்பலாம்.

அவ்வளவுதான்.
பல புதுப்புது தகவல்களை உடனுக்குடன் அறிந்திட தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்முடன்.

புதன், 3 ஆகஸ்ட், 2016

Payoneer MasterCard மற்றும் $25 USD இலவசமாக பெற்றுக் கொள்வது எவ்வாறு..?



அஸ்ஸலாமு அழைக்கும்

இன்றைய காலத்தில் ஆன்லைன் மூலமா கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவது சின்ன விசயமாக போயிடு. கொடுக்கல் வாங்கல் செய்யும் போது நமக்கு ஆன்லைன் Account அல்லது Visa Or MasterCARD தேவைப்படும்.
இன்று எல்லா வங்கிகளும் Visa Card கொடுத்தாலும் ஆன்லைன் Activation கிடைப்பத்தில்லை அதுக்கு பதிலாக ஆன்லைன் மூலம் இலவசமாக MasterCARD பெற்றுக்கொள்ள Payoneer என்ற இணையதளம் வழங்குகின்றது.

அதை எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது என்று இன்று நாம் கற்றுகொல்ல்வோம்.

முதலில் உங்களுடைய முகவரி எல்லாத்தையும் சரி செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ளவாறு.

EX:
AL Mohamed Raseem
Batticaloa Road,
Alim Nager,
Mutur - 02
Potal Code: 31200 ( கட்டாயம் )
+94757680204 / +94776014112 

மேல் உள்ளது போல உக்களுடைய முகவரி எல்லாத்தையும் சரியாக எடுத்து கொண்ட பினர் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து ஒரு Application form fill Up செய்து கொள்ளுங்கள்.

Sign up




நான் Already Register பண்ணிட்டன் So என்னுடைய ஈமெயில் எடுக்காது முதலில் நீங்கள் கொடுக்கும் பொது சரியாத முகவரி மற்றும் ஈமெயில் கொடுத்து கொள்ளுங்கள்.

எல்லாம் சரி என்றால் நிச்சயமாக பத்து நாட்களுக்குள் உங்களுடைய Card கையில் கிடைக்கும்.

இந்த பதிவு மூலம் பயன்பெற்றால் என்னுடைய வாட்ஸ்ஆப் நம்பர் ஒரு Msg போடுங்க கட்டாயம் என்னுடைய தகவல் எந்த அளவு பயனாக உள்ளது என்று பாக்க வேண்டும்.

மேலும் தகவல் தேவை என்றால் என்னுடைய Number இருக்கு Call or Call பண்ணுங்க.


Popular Posts

Facebook

Blog Archive