மே 2018 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மே 2018 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 31 மே, 2018

தந்தையின் அன்பு

1♥. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2♥. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3.♥தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

4.♥தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?

5♥.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6.♥ தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு பாடமாக எண்ணி பயன் அடைந்து கொள்ளுங்கள்..

7♥ தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்...

8♥ மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...

9♥ முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம்.உன்னை கொஞ்சி வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்......

10♥ அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்.
தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கணும்னு மார்பில் அனைத்துக் கொள்வாள்.
ஆனால் தந்தைதான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோழின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை.

♥அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது பயன் படுத்துக் கொள்.
தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை.
இது உண்மை...சத்தியம்.

தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல்.

தந்தையை மதிக்காதவன்
வாழ்கையில் எந்த உயரத்திற்கும் செல்வது கடினமே.

இப்படிக்கு
தந்தையின் அன்பை உணரும்
உங்களில் ஒருவன்...

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????
நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்
அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது
பின்விளைவு
பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று
சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்
பின்விளைவு
அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா
சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்
டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது
இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல்
இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள் நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்
இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்
மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

யார் ஏழை ❓❓❓

யார் ஏழை  ❓❓❓

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗

♻இதில் யார்_பணக்காரர்...❓❗

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,

டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗

பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.🌠👌🏽உண்மையில்நல்லசெய்தி👍பகிரலாம்பணக்காரர்கள் மனம்மாற.🙏🏾

ஞாயிறு, 27 மே, 2018

கேள்வி கேட்கிறது தூத்துக்குடி!...பதில் சொல்லவேண்டும் முதல்வர் எடப்பாடி

"கேள்வி கேட்கிறது தூத்துக்குடி!...பதில் சொல்லவேண்டும் முதல்வர் எடப்பாடி!"

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சத்தியம் தொலைக்காட்சி நடத்திய விசாரணையின்போது கீழ்கண்ட 8 கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்:-

1 . போராட்டக்காரர்கள் கலவரம் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் பேரணி நடத்தியிருந்தால், பெற்றோர், பெண்கள், பிள்ளைகள் என்று குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்களா?

2 . "சுடுவதற்கு உத்தரவிட்டது யார்?" என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும், பத்திரிகைகளும், ஊடகங்களும் கேட்ட கேள்விக்கு இதுவரையிலும், முதல்வரிடமிருந்தோ, காவல்துறை DIG யிடமிருந்தோ, மாவட்ட ஆட்சியிடமிருந்தோ, காவல் கண்காணிப்பாளரிடமிருந்தோ பதில் இல்லை! என்ன காரணம்?

3 . போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கியபோது, சுற்று சுவர் 'கேட்' பூட்டப்பட்டு, அதற்கு முன்னாள் சுமார் 2000 காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, உள்ளே இருந்த இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தலை கீழாக கவிழ்க்கப்பட்டு தீயில் எரிந்து கொண்டிருந்தது எப்படி? துப்பாக்கி சூடு நடைபெறும்போது மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள தலை தெறிக்க ஓடியிருப்பார்களே தவிர, மெதுவாக வாகனங்களை கவிழ்த்துப்போட்டு தீவைக்க மாட்டார்கள்! அப்படியென்றால் தீ வைத்தது யார்?

4 . 'ஸ்டெர்லைட்' ஆலையிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும், பக்கத்து ஊர்களிலும் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகள் குறித்து கடந்த மார்ச் 28 ந் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை என்ன ஆனது? அது ஏன் தூத்துக்குடி மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை?

5 . இறந்தவர்களையும், காயம் பட்டவர்களையும் மருத்துவ மனையில் சந்திக்க உறவினர்களுக்கும், பொது மக்களுக்கும் அனுமதி மறுப்பதேன்? இறந்து போனவர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்த 14 பேர்களைவிட மிக அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறதே, உண்மையா?

6 தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அனைத்து CCTV கேமராக்களும் சரியான கோணத்தில் இல்லாமல் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது எப்படி?
போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்தவுடனேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால், அவர்கள் தலை தெறிக்க வெளியே ஓடி வந்தனர்! அப்படியானால், கேமராக்களை தலைகீழாக தொங்க விட்டது யார்?

7 . ஏறக்குறைய 30000 பேர் கலந்து கொண்ட பேரணிக்கு, பாதுகாப்புக்காக வெறும் 2000 காவலர்கள் போதும் என்று முடிவு செய்தது யார்? 144 தடை உத்தரவு இருக்கும்போது பேரணி ஆரம்பித்த இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தால், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதற்கு வாய்ப்பே இருந்திருக்காது! இதற்கு காரணம் யார்?

8 . துப்பாக்கி சூடு ஆரம்பித்த உடனேயே தெறித்து ஓடிய போராட்டக்காரர்களை இரு சக்கர மற்றும் வேன் முதலிய வாகனங்களில் துரத்திச் சென்று சுட்டது ஏன்?

பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்கள் எழுப்பும் இந்த 8 கேள்விகளும் மிக மிக நியாயமானவை, மனிதாபிமானம் மிக்கவை! இவற்றிற்கு கண்டிப்பாக தமிழக அரசும், முதல்வர் எடப்பாடியும் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும்!

நன்றி: 'சத்தியம் தொலைக்காட்சி' 26 . 05 . 2018 அனறு மதியம் 1 .30 மணிக்கு ஒளிபரப்பிய "தூத்துக்குடி கேட்கிறது" என்ற நிகழ்ச்சியிலிருந்து. ..

வெள்ளி, 25 மே, 2018

🌸 *_நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?_*

🌸 *_நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?_*

💁🏻‍♀  *Kidney - சிறுநீரகம் :* நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

💁🏻‍♀ *Stomach - வயிறு :* குளிரூட்டப்பட்ட உணவுகள்.

💁🏻‍♀ *Lungs - நுரையீரல் :* புகைப்பிடித்தல்.

💁🏻‍♀ *Lever - கல்லீரல் :* கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.

💁🏻‍♀ *Heart - இதயம் :* உப்பு நிறைந்த உணவு வகைகள்.

💁🏻‍♀ *Pancreas - கணையம் :* அதிகப்படியான நொறுக்கு தீனி

💁🏻‍♀ *Intestines - குடல் :* கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.

💁🏻‍♀ *Eyes - கண்கள் :* தொலைகாட்சி பெட்டி, தொடுதிரை கைபேசி & கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது.

💁🏻‍♀ *Gall bladder - பித்தப்பை :* காலை உணவை தவிர்ப்பது.

🙋🏻நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.🙋🏻

ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.

மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும்.

எளிதாக கிடைக்காது.

அசல் போல் இயங்காது.

உண்ணும் உணவில் கவனம் தேவை.

வாழ்க்கை முறையில் கவனம் தேவை.

💁🏻‍♀ உங்கள் சுற்றத்திற்கும்
இதை பகிரவும் 💁🏻‍♀

இதை செய்தால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்குதுணை புரியும்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய் அமையும்

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி உங்கள் மீது அவர்களையறியாத ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8. உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.

9. பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். கல்வியின் முக்கியத்துவம், ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.

இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.
என்றும் நட்புடன்.....!

குற்றவாளி கூண்டில் நீதிபதியைய் தள்ளி சரமாறியாக கேள்வி கேட்ட சிறுவன்..!

ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க……?அதுக்கு இவ்ளோ கோவமா?

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர்.

ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
ஆனால் பயணம்..?

3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.

5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?

6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?

7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?

8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.

9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.

10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
———————————————
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் …
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ..

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ….

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் …

“மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்” …

கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்…!

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!


உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. …

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. …

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா….

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ….

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா….

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 – 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா…

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்…

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்குமமேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே…

ஹெல்மெட்_அணிவதால். …
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது…

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே…

மீத்தேன் ஹை கார்பன் நீயூட்ரினோ இவையெல்லாம் எதற்காக .?

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். …

இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்….

இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!

Popular Posts

Facebook

Blog Archive