✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴பலா மரம் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴பலா மரம் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 8 ஜூன், 2018

✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴பலா மரம்

✍ *மரமும்* *மனிதனும்* 🌴🌴🌴🌴🌴🌴🌴பலா மரம்

பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் ‘பழங்களின் அரசன்’ என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது. பலா எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.

தென்னிந்தியாவில், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும். இந்தியாவில், 2000ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சுமார் 14,286 ஏக்கர் பரப்பளவில் (சுமார் 1,00,000 மரங்கள்) பலா வளர்க்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டுத்தோட்டங்களிலும், வெற்றிலை, காப்பி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் நிழலுக்காகவும் பலா வளர்க்கப்படுகிறது. இலங்கையில், முக்கியமாக மரத்திற்காகவும், தாய்லாந்தில் பழத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது. பலா சாதாரணமாக விதை மூலமே வளர்க்கப்படுகிறது. நீரிலோ, 10% ஜிப்பரெலிக் அமில கரைசலிலோ ஊர வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை நிலத்தில் நேரடியாக நடாமல், நாற்றங்காலிலும் நடலாம். ஆனால், நாற்றுகளை விரைவில் நடாவிட்டால் அவை நாற்றங்காலிலேயே வேர் பிடித்து விடும். பலவிதமான ஒட்டு முறைகளில் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டாலும், அவை விதைசெடிகள் அளவு பிரபலமடையவில்லை. எனினும், காற்றில் வேர் பிடிக்கச்செய்தல், சிறு தண்டுகளை வேர் பிடிக்கச்செய்தல் ஆகிய முறைகள் மூலம் பலாச்செடிகள் உருவாக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் பயன்கள் :

 இதிலுள்ள பொட்டாசியம் சத்து, குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு நோய் வராமல் தவிர்க்கப்படுகிறது. கொழுப்புச்சத்து இல்லை என்பதால், இதய நோயாளிகளும் சாப்பிடலாம். இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தக்குறைபாடு வராமல் தடுக்கிறது.

 வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், பலா மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.

பலாவில் உள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தவிர, உடல் முதிர்ச்சி ஏற்படாமல் இளமையாகத் தோன்றவும் உதவுகிறது.

செரிமானக்கோளாறு மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பலா நன்கு செயலாற்றுகிறது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுத்து, மலம் இலகுவாக வெளியேறவும் உதவுகிறது. பெருங்குடலையும் சுத்தமாக வைக்கிறது.

 பலாப்பழத்திலுள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது. எலும்புகள் பலமின்றி இருத்தல், எலும்புருக்கி நோய் உள்ளோர், பலா சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும்.

 மக்னீசியம் மற்றம் கால்சியம் சத்துக்கள் இதற்கு உதவுகின்றன. பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படும். மனித இயக்கத்திற்கு உதவும் தைராய்டு ஹார்மோன் உடலில் உற்பத்தியாகவும், அதை உட்கிரகிக்கவும் தாமிரச் சத்து அவசியம். பலாவிலுள்ள தாமிரச்சத்து இதற்கு உதவி செய்கிறது.

மருந்தாகும் ‘வேர்’ பலா மரத்தின் வேருக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. மூச்சுத்திணறல், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டோர், மரத்தின் வேரை நீரில் வேகவைத்து, அந்த சாற்றைப் பருகினால் நோய் விரைவில் குணமாகும். பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன.

 கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன. அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.

ஆசியாவில் பலாப்பழங்கள் பலவாறாக உண்ணப்படுகின்றன. பெரும்பாலும், நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் அப்படியே உண்ணப்படுகின்றன. சிறு காய்,மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூட கறியாக சமைத்தோ அல்லது மெல்லிய வறுவல்களாகவோ உண்ணப்படுகின்றன.

 ஆனால், மேலை நாடுகளில் பலாப்பழத்தின் மணம் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது. எனவே, அவர்கள் பெரும்பாலும் முற்றிய காய் சுளைகளையே உண்கின்றனர். மற்ற பழங்களைப் போலவே பலாப்பழத்திலிருந்தும் சாறு, ஐஸ் கிரீம், பழக்கூழ் மற்றும் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

 பலாப்பழத்தின் விதைகள் கூட ஆசியாவில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை வறுத்தும், வேக வைத்தும், சர்க்கரைப்பாகில் ஊற வைத்தும் உண்ணப்படுகின்றன. இவற்றை அரைத்து மாவும் தயாரிக்கப்படுகிறது. பலாப்பூக்கள் கூட சிலரால் சமைத்து உண்ணப்படுகின்றன. உணவாக மட்டுமின்றி, பலாப்பழத்தின் கடினமான தோல், பெக்டின் வகை கூழ்கள் தயாரிக்க உதவுகிறது. மேலும், இது புகையிலையை பதனிட பயன்படுகிறது.

 முக்கனிகளில் ஒன்றாக முக்கியத்துவம் கொடுத்திருப்பதே, பலாவின் மகத்துவங்களை அறிந்துகொள்ள எளிய சான்று. வைட்டமின் ‘ஏ’, ‘சி’, தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின், ரிபோஃப்ளேவின் ஆகிய சத்துக்கள் உள்ள பலா, சிறந்த மருத்துவ குணங்கள் நிரம்பியது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இதன் உற்பத்தி துவங்கியிருக்கலாம் என்கிறார்கள்.

 இந்தியா, இலங்கை, வங்காளம் மற்றும் தெற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் விளைகிறது. தமிழகத்தில் கடலூர், பண்ருட்டி பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பழத்தின் சுளை மற்றும் அதனுள் இருக்கும் விதையும் உணவாகச் சாப்பிடலாம். பலாக்காயை சமைத்து பயன்படுத்தலாம். மரத்தில் விளையும் பழங்களில் பெரியது என்ற பெருமை இதற்கு மட்டுமே உண்டு.

 ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் அதிகமாக இருப்பதே பலாப்பழத்தின் இனிப்புச் சுவைக்குக் காரணம். இது, சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். ரத்த அழுத்தம் உள்ளோர் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாதது பலா.
🌱🌱🌱🌱🌱

Popular Posts

Facebook

Blog Archive