அடைகோழிகளை நோய்களிடமிருந்து பாதுகாக்க இதை செய்து பாருங்கள் !! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil அடைகோழிகளை நோய்களிடமிருந்து பாதுகாக்க இதை செய்து பாருங்கள் !! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 9 ஜூன், 2018

அடைகோழிகளை நோய்களிடமிருந்து பாதுகாக்க இதை செய்து பாருங்கள் !!


அடைக்காக்கும் கோழி மற்றும் இளம் குஞ்சுகள் பராமரிப்பு !!

 நாட்டுக்கோழிகள் பொதுவாக 10 முட்டைகள் முதல் 20 முட்டைகள் வரை இடும். அந்த நாட்டுக்கோழிகள் அடைக்காக்கும் பொழுதும், குஞ்சு பொரிக்கும் பொழுதும் பராமரிக்க வேண்டிய செயல்முறைகள் பற்றி பார்ப்போம்.

அடைக்காக்கும் கோழி பராமரிப்பு :

 சித்திரை மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் அடை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரால் முகத்தில் அம்மை நோய் தாக்கி சிறு குஞ்சுகள் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

 நாட்டுக்கோழிகள் பிறந்த 150 நாட்களில் முட்டை இட ஆரம்பிக்கும். முதன்முதலாக அடைக்காக்கும் கோழிகளை தவிர்த்து 2 அல்லது 3-வது முறையாக அடைக்கு வரும் கோழிகளை பயன்படுத்தலாம். ஏனெனில் முதல்முறையாக அடைக்காக்கும் போது பல கோழிகளுக்கு முட்டைகள் மீது சரியாக உட்கார தெரியாது.

 ஒரு அடைக்கு 12 முட்டைகளுக்கு மேல் வைக்கக்கூடாது. ஏனெனில் வெப்பம் சீராக இல்லாமல் குஞ்சு பொரிக்கும் திறன் குறைய வாய்ப்பு அதிகம் உண்டு.

 அடை வைக்கும் முட்டைகளை காய்ந்த வைக்கோல் அல்லது உமி போன்றவற்றின் மீது வைப்பதை விட, இலேசான ஈர மணல் மீது வைப்பதால் பொரிக்கும் தன்மை அதிகரித்து, பேன் போன்ற ஒட்டுண்ணிகள் தாக்காமல் இருக்கும்.

 அடையில் உட்காரும் கோழி தான் விரும்பிய பொழுது எழுந்து வெளியில் சென்று வருமாறு இருக்க வேண்டும். மூடி வைக்கும் நிலையில் இருக்குமானால், அதை 1 நாட்களுக்கு ஒரு முறை திறந்துவிட வேண்டும்.

 அடையில் இருந்து வெளியே வந்த கோழிகள் உடனடியாக குடிக்கும் வகையில் தண்ணீரை தயாராக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

 காய்ந்த மிளகாய்கள் இரண்டினை முட்டைகள் அருகில் வைப்பதன் மூலம் ஒட்டுண்ணிகள் கோழிகளை தாக்காது.

 21-வது நாள் குஞ்சுகள் அனைத்தும் பொரித்து விடும். 21 நாட்களில் முட்டைகள் அனைத்தும் பொரிக்கவில்லை எனில், அதே கோழியை மறுபடியும் வேறு முட்டைகள் மீது உட்கார வைக்ககூடாது.

 ஏனெனில் அடைக்காக்கும் கோழிகள் சரியாக உண்ணாது. எனவே தொடர்ந்து முட்டைகள் மீது உட்கார வைப்பதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழி இறக்க வாய்ப்பு உள்ளது.

 கோழிகள் அடையில் இருக்கும் போது பெரும்பாலும் நோய்கள் அவற்றை தாக்காது. ஏனெனில் எந்த நோய்களும் முதலில் வலுவான கோழிகளை மட்டுமே தாக்கும்.

இளம்குஞ்சுகள் பராமரிப்பு :

 பொரித்த குஞ்சுகளுக்கு தண்ணீரில் குளுக்கோஸ் கலந்து வைக்கலாம். கம்பு போன்ற சிறு தானியங்களை உணவாக தர வேண்டும்.

 நாட்டு கோழி குஞ்சுகள் நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றிருந்தாலும் கண்டிப்பாக தடுப்பு+சி கொடுக்க வேண்டும்.

 குஞ்சுகள் பொரித்த பதினைந்தாவது நாள் ராணிக்கட் அதாவது, வெள்ளை கழிச்சல் தடுப்பு+சி போன்றவை போடுவதன் மூலம் குஞ்சுகள் இறப்பதை முற்றிலும் தவிர்க்க முடியும்.

 குஞ்சு பிறந்த இருபது நாட்கள் கழித்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

 பிறந்த குஞ்சுகளுக்கு சிறிது வேப்பிலை, துளசி, தும்பை இலை மற்றும் சிறிது பிரண்டையை சேர்த்து அரைத்து, அரைலிட்டர் தண்ணீரில் கலந்து, அதை இரண்டு நாட்கள் ஒரு முறை கொடுப்பதன் மூலம் பல வியாதிகளை தடுக்கலாம். இது குடற்புழு நீக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

 இளம் குஞ்சுகளுக்கு மீன் அமிலம் தண்ணீரில் கலந்து கொடுப்பதன் மூலம் வேகமான வளர்ச்சி கிடைக்கும்.

 அதேபோன்று கரையான்களை இளம் குஞ்சுகள் சாப்பிடுவதால், விரைவில் இறக்கை முளைத்து அதிவேக வளர்ச்சிபெறும்.
இதுபோன்ற மேலும் பயனுள்ள விவசாயத் தகவல்களை இலவசமாக பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்! 

https://goo.gl/9AZRL7 

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Popular Posts

Facebook

Blog Archive