*சாதி தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்ப்போம்* | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil *சாதி தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்ப்போம்* ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 4 ஜூலை, 2018

*சாதி தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்ப்போம்*

*நான் படித்த சில செய்திகளை உங்களுக்கு தருகின்றேன். இதை நாம் அனைவரும் படித்தால் மிகவும் நல்லது.*

1. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுத்தப்பட்ட சங்க இலக்கியங்களை படிக்கும் போது தமிழ் மக்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் யார் என்றால்

1. துடியன்
2. பாணன்
3. பறையன்
4. கடம்பன்

இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்று புறநானூறு 335 தெளிவாகக் கூறுகின்றது.

இது தவிற வேறு எந்த சாதி பெயரும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. *தமிழ் மக்கள் அனைவரும் இந்த நான்கிற்குள் அடங்குவர்.*

2. உலக பிரசித்தம் வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் தலைமை குருவாக இருந்தவர் நந்தனார் என்பவர். இவர் ஒரு பறையர் குடியை சார்ந்தவர். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவரை ஆரியர்கள் உயிருடன் எரித்துவிட்டு சிதம்பரம் கோயிலை கைப்பற்றினார்.

3. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பறையர் குடியை சேர்ந்தவர்.*(ஐரோப்பியர்களின் ஆட்சியில் தமிழக அரசு இத்தகவலை வெளியிட்டது. ஆண்டு 1905. வெளியிட்டவர் W.பிரான்சிஸ் - Civil Service)*

மேற்கண்ட தகவலின்படி பறையர்கள் என்பவர்கள் கீழ்சாதி என்று எப்போதுமே கண்டதில்லை. தமிழகத்தில் கீழ் சாதியென்றும் மேல் சாதியென்றும் ஒருவரும் இருந்ததில்லை.

அப்படியிருக்க எப்படி ஒரு கூட்டம் மேல் சாதியென்றும் மற்றொரு கூட்டம் கீழ் சாதியென்றும் ஆனாது என்னும் கேள்வி எழும்புகின்றது.

*சாதி தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்ப்போம்* 


கி.பி.900 பின் ஆரியர்கள் தமிழகத்திற்குள் படையெடுத்து வந்து தமிழகத்தை வென்றனர். இப்படி படையெடுத்து வந்தவர்களை ஒரு கூட்ட மக்கள் அண்டி பிழைத்தனர். ஒரு கூட்ட மக்கள் அமைதி காத்தனர். ஒரு கூட்ட மக்கள் எதிர்த்தனர். ஒரு கூட்ட மக்கள் மலைகளுக்கு ஓடி சென்றனர்.

1. யாரெல்லாம் அண்டி பிழைத்தனரோ அவர்களுக்கு சகல செல்வாக்கு வழங்கப்பட்டது. அவர்கள்தான் இன்றைய உயர்சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.

2. யாரெல்லாம் அமைதி காத்தனரோ அவர்கள்தான் இன்றைய இடைசாதி என்று அழைக்கப்படுகின்றனர்.

3. யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களது நிலங்கள் மற்றும் உடைமைகள் பிடுங்கப்பட்டு ஊருக்கு புறம்பே தள்ளப்பட்டனர். அவர்கள்தான் இன்றைய கீழ்சாதி என்று அழைக்கப்படுகின்றவர்கள்.

4. யாரெல்லாம் பயந்து மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடினார்களோ அவர்கள் மலைசாதி ஆயினர். (இத்தகவலை சொன்னவர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்)

*சாதிப்பிரிவு இப்படிதான் இந்தியாவிற்குள் வந்தது. எதிர்த்தவன் கீழ்சாதியானான். அண்டி பிழைத்தவர்கள் உயர்சாதியானார்கள்.*

கால்ட்வெல் ஐயா அவர்கள் கூறுவது மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

Popular Posts

Facebook

Blog Archive