ஆகஸ்ட் 2018 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஆகஸ்ட் 2018 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 25 ஆகஸ்ட், 2018

கேரளா அளவுக்கு மீறி ஆசை பட்டால்?????

அளவுக்கு மீறி ஆசை பட்டால்???????______________

*கேரளா மக்களே உணருங்கள் இயற்கையோடு விளையாட்டு வேண்டாம்.*

*கன்னியாகுமரி முதல் நீலகிரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி, தமிழகம் நோக்கி வரும் அனைத்து நீர் வழித்தடங்களையும் இதுநாள்வரை தன்பக்கம் திருப்பியும், இடைமறித்துமே வந்திருக்கிறது கேரளா.*

*மேலும் முல்லைப்பெரியார் அணை பலவீனமாக உள்ளது, அணை உடைந்தால் கேரளாவே மூழ்கி காணாமல் போகும், எனவே புதிய அணை கட்டவேண்டும் என பொய் பரப்புரைகளை நீண்டகாலமாக பரப்பி வருகிறது கேரள அரசு. கேரளா ஊடகங்களும் பேராபத்து என அலறுகின்றன.*

*ஆனால் உண்மை நிலை என்ன?*

*முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு எக்கச்சக்கமான நீர் தேங்கி உள்ளது என்றாலும், தமிழகத்துக்கு அத்துனை நீரும் வராது. காரணம் அணை குழியில் உள்ளது. 125 அடி வரை உள்ள நீர் நிரந்தர இருப்பு நீராகும். அதற்குமேல் உள்ள நீர் மட்டுமே மேடான தமிழகத்துக்கு வரும்.*

*மேலும் முல்லைபெரியார் இன்றுவரை மிகவும் உறுதியோடு உள்ளது. இதனால் கேரளத்துக்கு ஆபத்து எதுவும் இல்லை . பின் ஏன் கேரளா அலறுகிறது? காரணம் இதுதான்.*

*ஆசியாவின் 2-வது மிகப்பெரிய ஆர்ச் அணை. இந்தியாவின் முதல் ஆர்ச் அணை. இந்தியாவின் 3-வது உயரமான அணை. இந்தியாவின் மிக நீண்ட நிலத்தடி நீர் மின் உற்பத்தி நிலையம் கொண்ட அணை என பல சிறப்புகள் கொண்ட இடுக்கி அணையை பெரியாற்றின் குறுக்கே 1976-ல் கேரளா கட்டியது.*

*அணையின் உயரம் 555 அடி. அணையில் நீரின் பரப்பு 36,000 ஏக்கர். இந்த நீர்த்தேக்கம் இடுக்கி, செறுதோணி, குளமாவு ஆகிய மூன்று அணைக்கட்டுகளை கொண்டதாகும். பல சிக்கலான கட்டுமான தொழில்நுட்பங்களை கொண்ட இந்த அணையில் பல சுரங்கங்கள் உள்ளன.*

*இந்த அணையில் மதகுகள் இல்லை. எனவே நீர் திறப்பு இல்லை. நீர் முற்றிலும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. கணடா நாட்டின் உதவியுடன் மூலமட்டம் என்ற இடத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.*

*அணையில் இருந்து நீர் சுரங்கம் மூலம் 43km தூரத்தில் உள்ள மூலமட்டதிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவின் 60% மின்சாரம் இந்த அணையில் உற்பத்தி செய்யபடுகிறது. இந்த அணை கடந்த 39 ஆண்டுகளில் மூன்று முறை(1981,1992, 2018) மட்டுமே நிரம்பி உள்ளது.*

*எனவேதான் இங்கு நீர் கொண்டுவர கேரளா, முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக நாடகம் ஆடுகிறது. மேலும் அப்படியே முல்லைபெரியாறு அணை உடைந்தாலும், அங்கிருந்து வெளியேறும் நீர் அனைத்தும் இடுக்கி அணையை வந்து சேரும். அவ்வளவு தண்ணீரை இடுக்கி அணை தாங்குமா? கண்டிப்பாக...*

*முல்லைப் பெரியார் அணையை விட 7 மடங்கு பெரியது இடுக்கி அணை. என்னது 7 மடங்கு பெருசா? என நீங்கள் வாய் பிளப்பது தெரிகிறது. அப்படிப்பட்ட இடுக்கி அணைதான் இன்று நிரம்பி  வழிகிறது.*

*இதில் செறுதோணி அணையிலிருந்து ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு தற்போது நீர் வெளியேற்றப்பற்றுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெயும் மழை வரும் ஓணம் பண்டிகை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*

*இந்த நிலையில் மிகவும் வேகமாக முல்லை பெரியாறு அணையும்  நிரம்பி வருகிறது. முல்லை பெரியார் நிரம்பினால் அங்கு திறக்கப்படும் நீரும் இடுக்கி அணையை  வந்து சேரும். என்ன செய்ய போகிறது கேரளா?*

*ஏற்கனவே இடுக்கி அணையில் திறக்கப்பட்ட நீரும், இடைமலையாறு அணையில் திறக்கப்பட்ட நீரும், கீழ் சோலையாறு அணை, பெரிக்கால்குத்து அணை, சிமினி அணைகளில் திறக்கப்பட்ட நீரும் பெரியாற்றில் பெரும் பிரளயம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.*

*இடுக்கி, எர்ணாகுளம், கொச்சி, திருச்சூர் முதலிய மாவட்டங்கள் கடல்போல காட்சி  அளிக்கிறது. மேலும் , பரம்பிக்குளம், ஆழியாறு, பொத்தூண்டி, மங்களம், பீச்சி, மழம்புழா, காஞ்சரப்புழா போன்ற அணைகளில் திறக்கப்பட்ட நீராலும், நீலகிரி மாவட்ட அணைகளில் திறக்கப்பட்ட நீராலும் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்கள் மூழ்கி உள்ளன.*

*தற்போதைக்கு மழைவேறு தீவிரம் காட்டி வருகிறது. முல்லைப்பெரியாறு உடைந்தால் கேரளா மூழ்கும் என்று பொய் பரப்புரை செய்யும் கேரளாவே கொஞ்சம் நினைத்து பாருங்கள்.*

*நீங்கள் 36000 ஏக்கர் பரப்பளவில் கட்டி வைத்துள்ள இவ்வளவு பெரிய இடுக்கி அணை இப்போது இடிந்தால் என்னவாகும்? கேரளாவே இல்லாமல் போகும். தன் வினை தன்னை சுடும் என்பார்கள். கேரளத்துக்கு இவ்வளவு பெரிய ஆபத்தான அணை வேண்டுமா?*

*இயற்கை நினைத்தால் அனைத்தும் பாழாய் போகும். இந்த பேராபத்திலிருந்து மீண்டு வர கேரளாவுக்காக இயற்கையிடம் பிராத்திக்கிறோம்.*

*இனியாவது தமிழகத்தின் பக்கம் வரும் ஆறுகளை தடுத்து நிறுத்தி உங்கள் பக்கம் திருப்பாதீர். இல்லையெனில் இன்று இல்லாவிடினும் என்றாவது ஒருநாள் பிரளயம் போன்ற பேரழிவை கேரளம் சந்திக்கும்.*

*தற்போது முல்லை பெரியார் அணையின் நீர் தங்களுக்கு வேண்டாம் என்று கேரளா தஞ்சம் கோருகிறது. எனவேதான் ஏராளமான நீர் முல்லை பெரியாறில் திறக்கப்பட்டு வைகை அணை நோக்கி பாய்ந்து வருகிறது.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.

                       
*#வாழ்க_வளமுடன்.*

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

விவசாய கேள்வி - பதில்கள்...!


விவசாய கேள்வி - பதில்கள்...!

❓ பலா மரத்தில் அதிக மகசு+லைப் பெருவதற்கான வழிகள் யாவை ?

🍁 அரப்பு மோர் கரைசலைப் பு+ப்பிடிக்கும் பருவத்தில் தௌpப்பதால் பயிரின் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பு+க்கள் பு+க்கும். ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும்.

❓ முருங்கை மரத்தில் அதிகம் காய்கள் பிடிக்க வேண்டும். அதற்கு என்ன இயற்கை மருந்து தௌpக்கலாம் ?

🍁 இரண்டு முறை நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் அதிக துளிர் விட்டு அதிக கிளைகளைப் பெற்று காய்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

🍁 மண்புழு உரம், மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல், உயிர் உரங்கள் இவற்றைத் தொடர்ந்து வேரில் இடுவதால் திரட்சியான மற்றும் எடை அதிகமான காய்களைப் பெறலாம்.

🍁 மீன் அமினோ அமிலத்தை இலைகள் மீது தௌpப்பதாலும், வேரில் இடுவதாலும் கரும்பச்சை நிற இலைகளைப் பெறலாம் மற்றும் அதிக வளர்ச்சியும் இருக்கும்.

❓ கொத்தமல்லியில் வண்டுகள் அதிகமாக உள்ளது. அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன ?

🍁 கீரைத் தோட்டத்தினைச் சுற்றிலும் சாமந்திப்பு+ செடிகளை நடவு செய்யலாம். சாமந்திப்பு+ பு+ச்சிகளையும், வண்டுகளையும் அதிகம் கவரும். அதனால் கீரைகளை அதிகம் தாக்காது.

🍁 அதையும் தாண்டி சில பு+ச்சிகள் கீரைகளைத் தாக்கினால், இயற்கை பு+ச்சி விரட்டி மூலம் விரட்டி விடலாம். பச்சை மிளகாய், இஞ்சி, பு+ண்டு கரைசலைத் தௌpக்கலாம்.

❓ கன்று குட்டிக்கு கழிச்சல் அதிகமாக உள்ளது. அதைத் தடுக்க என்ன செய்யலாம் ?

🍁 வசம்பு இலை 2 அல்லது சிறிதளவு, கொய்யா கொழுந்து 200 கிராம், சுக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் கன்று குட்டிகளுக்கு கழிச்சல் நின்று விடும்.

❓ கரும்புத்தோட்டத்தில் எலிகளைக் கட்டுப்படுத்த என்ன இயற்கையான வழி ?

🍁 புதினா செடிகளை வரப்புகளில் நடுவதன் மூலம் எலிகள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

🍁 மீன் எண்ணெயை வயலைச் சுற்றிலும் தௌpப்பதன் மூலம் எலி வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

🍁 நொச்சி செடியை வயலைச் சுற்றிலும் வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

❓ கொய்யா மரத்திற்கு என்ன உரம் இடலாம் ?

🍁 ஜீவாமிர்த கரைசல், மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை மக்கிய தொழுவுரத்துடன் கலந்து வேரில் இடுவதால் மரம் நன்கு வளரும். கற்பு+ரகரைசலைத் தௌpப்பதன் மூலம் பு+ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

நித்ராவின் விவசாய ஆலோசகர்
வு.நித்யா டீ.ளுஉ.இ(யுபசiஉரடவரசந)

5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !

இது போன்று மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள கீழ்கண்ட லிங்க் ஐ கிளிக் செய்யவும்!

https://goo.gl/9AZRL7

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'

- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.
இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.

ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.
மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.
ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.

அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.

சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.

நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.
இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?

'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?

முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.
ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.

நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.
காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.
முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.
பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. 

காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் 

வீராணம் ஏரி.

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.

இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்...
இப்படிக்கு, 

இயற்கையை நேசிப்பவன்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

இது முற்றிலும் இலவசம்..

நேற்று காலை உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணைக்கு சென்றிருந்தேன்..

ஏற்கனவே 1000 மரக்கன்றுகளை பற்றி பதிவு செய்து இருந்தேன்.. அதை எடுப்பதற்கு..

Forest Officer திரு கிருஷ்ணன் உடன் இருந்தார்.. மிகவும் sincere ஆக மரக்கன்றுகள் வளர்த்து இருக்கிறார்கள்..2 - 3 அடி வளர்ந்த கன்றுகளும் உள்ளன..

அவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே கொடுத்து விட ஆசைப்படுகிறார்.. Close to *ஒன்றரை லட்சம்* மரக்கன்றுகள் அங்கே இருக்கிறது. இதுவரை ஐம்பதாயிரம் கூட போகவில்லை..

"எங்க team கஷ்டப்பட்டு இவ்வளவும் தயார் பண்ணி இருக்கிறோம் சார்.. நீங்கள் கம்ப்யூட்டரில் போட்டு நாலு பேருக்கு சொல்லுங்கள்.. தாராளமாக என்னுடைய போன் நம்பர் கொடுத்து கூப்பிட சொல்லுங்கள்..எவ்வளவு வேண்டுமானாலும் மரக்கன்றுகள் தருகிறேன்..!"என்று கூறியுள்ளார்..

இது முற்றிலும் இலவசம்..

திரு. கிருஷ்ணன், Forester, செல் நம்பர்.. +919524506991

நேற்று அவர்களிடம் இருந்த மரக்கன்றுகள் தேக்கு, மகாகனி, பூவரசு, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ் தேக்கு, வேங்கை, நெல்லி, பலா ஆகியன.

உடனே கூப்பிட்டு பயன் பெறவும்..?மரம் வளர்ப்போம்!!🌳*
*நம் தலைமுறை காப்போம்!!🌳*

*ஆயிரங்காலத்து பயிர் என கூறப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு*

*🌱மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும்.🌱*

*****************
*ரூ 15/- மட்டுமே*
*****************
*உங்கள் இல்லம் தேடி வந்து கொடுக்கப்படும்*

*☘டிம்பர் மரங்கள்*
-----------------------------
1.தேக்கு,
2.குமிழ்,
3.மஹோகனி,
4.ரோஸ்வுட் (ஈட்டி),
5.வேங்கை,
6.பூவரசு,
7.நீர்மருது,
8.மலைவேம்பு,

*☘பூ மரங்கள்*
--------------------
1.மகிழம்,
2.செண்பகம்,

*☘ஸ்தல விருட்சங்கள்*
-------------------------------------
1.வில்வம்,
2.அரசு,
3.வேம்பு,
4.நாகலிங்கம்.

*☘பழ மரங்கள்*
-----------------------
1.பலா,
2.நெல்லி
3.நாவல்.

*☘நிழல் மரங்கள்*
----------------------------
1.சொர்க்கம்,
2.புங்கன்,
3.இலுப்பை.

----------------------------------

மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும்.

உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை.....

இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

ரூ. 7/- மட்டும்

டிம்பர் மரங்கள்
-----------------------------
தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.

பூ மரங்கள்
--------------------
மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.

ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------
வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம்.

பழ மரங்கள்
-----------------------
பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல்.

நிழல் மரங்கள்
----------------------------
சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை.

Address:
ஈஷா நர்சரி
மேலக்கால் மெயின் ரோடு,
ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே,
கோச்சடை,
மதுரை.
Contact no: 94425 90015

மற்ற கிளைகள்
----------------------------------------
சென்னை 94440 47049

அம்பத்தூர் 98416 75987

செங்கல்பட்டு 94425 90076

சோளிங்கர் 93608 03551

வேலூர் 94890 45022

திருவண்ணாமலை 94425 90080

விழுப்புரம் 94890 45023

புதுச்சேரி 94890 45025

நெய்வேலி 94425 90029

நாகப்பட்டினம் 94425 90049

திருவாரூர் 94425 90050

கும்பகோணம் 99443 41220

பட்டுக்கோட்டை 94425 90034

பேராவூரணி 94878 95073

மன்னார்குடி 94878 95073

தஞ்சாவூர் 94425 90069

திருச்சி 94425 90033

பெரம்பலூர் 94425 90075

புதுக்கோட்டை 94425 90073

கரூர் 94425 90070



கோவை 94425 90074

ஊர்கூடி மரம் வளர்ப்போம்!!
உலகை பசுமை ஆக்குவோம்!!
*இலவச மரக்கன்றுகள் வழங்கும் இளந்தளிர் நாற்றுப்பண்ணை...!*

மற்ற நண்பர்கள் இப்பதிவை பகிர்ந்து உதவவும்.👆👆👆👌🏽

Popular Posts

Facebook

Blog Archive