Android N | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Android N

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Android N லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Android N லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜூலை, 2016

Android N - ஆன்ராயிடு என் 7.0 இயங்குதளத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

இன்று ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் ஒரு விடயம், பிரிஸ்மா போட்டோ செயலி. அடுத்தவர் கண்களை கவரும் வண்ணத்தில் எமது போட்டோகளை உண்மையான ஓவியம் போலவே மாற்றும் இந்த செயலி அதிகாரபூர்வமாக ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டும் வெளியாகி உள்ளது. அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களையும் கவர்ந்திருக்கும் இந்த ப்ரிஸ்மா அப்ஸ் தரும் ஓவிய எபெக்ட்-ஐ இப்போது உங்களது ஆன்ராயிடு போனிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஆன்ராயிடு ப்ரிஸ்மா செயலியை பெற்றுக்கொண்டு உங்களது போட்டோக்களையும் அழகிய ஓவியம் போல மாற்றிடுங்கள்.

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் ஒரு இயங்குதளமாக ஆன்ராயிடு இயங்குதளம் காணப்படுகின்றது. இன்று சந்தைக்கு அறிமுகமாகி நியாயமான விலையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் ஆன்ராயிடு இயங்குதளத்தினுடனேயே வெளிவருவது நாம் யாவரும் அறிந்த விடயமே.

அந்த வகையில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாக பரவலாக பேசப்பட்ட ஒரு விடயம் தான் ஆன்ராயிடு 7.0 இயங்குதளம்.

ஆன்ராயிடு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பிட்கான டிவிலப் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது இது குறித்தான அதிகாரபூர்வ செய்தியை கூகுள் வெளியிட்டு இருந்தது.


ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் வைரலாக பரவிய இந்த செய்தியில் கூகுள் சிறியதொரு விளையாட்டையும் சேர்த்திருந்தது. அதாவது ஆன்ராயிடு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பின் பெயர் N எழுத்தில் தான் அமையும் என்றும் உலகம் முழுதிலும் உள்ள ஆன்ராயிடு பாவனையாளர்கள் N எழுத்தில் ஆரம்பிக்கும் எந்தவொரு இனிப்பு பண்டத்தின் பெயரையும் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்து இருந்தது.

இதை தொடர்ந்து உலகம் முழுதிலும் உள்ள கோடிக்கணக்கான ஆன்ராயிடு பாவனையாளர்களால் பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. அவற்றிலே ஆன்ராயிடு இயங்குதளம் 7.0-வின் புதிய பெயராக 'நாடெல்லா' எனப்படும் பெயர் வைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது கூகுள் நிறுவனம் ஆன்ராயிடு 7.0 இயங்குதளத்தின் புதிய பெயரை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதாவது ஆன்ராயிடு நகட் (7.0) என்பதாகும்.


ஆன்ராயிடு நகட் இயங்குதளத்திட்கு உங்களது போனை அப்டேட்  செய்வது எப்படி?

ஆன்ராயிடு நகட்-இன் முழுமையான பதிப்பு அதிகாரபூர்வமாக இன்னும் வெளிவராத போதிலும் கூகுள் நிறுவனம் ஆன்ராயிடு நகட் இயங்குதளத்தின் டிவளப்பர் பதிப்பை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

டிவளர் பதிப்பாக வெளியிடப்பட்ட ஆன்ராயிடு என் நகட் இயங்குதளத்தை உங்களது போனுக்கு டவுன்லோடு  செய்வது எப்படி என்ற பதிவொன்று எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு நகட் 7.0 இயங்குதளம் பற்றிய மேலதிக செய்திகளை எமது தளத்தில் எதிர்பாருங்கள்.

Share this

Popular Posts

Facebook

Blog Archive