Antivirus | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Antivirus

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Antivirus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Antivirus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 மே, 2016

Android Mobile ல் Antivirus அவசியம்தானா? இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!



     Android மொபைல்களில் Anti Virus Install செய்து உபயோகிக்காத நபர்களே இல்லை
அவர்களிடம் இதை பற்றிய காரணத்தை கேட்கையில சில பேர் ( இது என்ன கேள்வி virusஇடம் இருந்து மொபைலை காத்துக்கொள்ளதான்) என்றும் சில பேர்  (யாருக்கு தெரியும்friends எல்லாரும் சொன்னாய்ங்க அதுனாலதா போட்ருக்கேன் ஆனா இதுவரைக்கும, இது ஒரு Virusa கூட புடுச்சதில்ல சாமி )என்றும் கூறினார்கள். ஆனால் ஒரு SMARTER தன்னுடைய மொபைலில்anti virus மென்பொருளை Install செய்திருக்க மாட்டார்.




  நானும் அதைத்தான் கூறுகிறேன் .நமது போனிற்கு anti virus தேவையே இல்லை சில பேர் கூறலாம் நான் உபயோகிக்கும்AntiVirus மென்பொருள் சில
Applicationஐ install செய்கையில் அதிலுள்ள virusஐ பிடித்துள்ளது என்று அவர்கள் முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் அதில் பிடிபட்ட
அந்த சர்ச்சைக்குறிய applicationகளால் நமது மொபைலை ஒன்றும் செய்திட முடியாது.


 
 Android என்பது ஒரு secure செய்யப்பட்ட OS இதனுடைய சிஸ்டம் memory அனைத்தையும் அது தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருக்கும்
ஆதலால் எந்த ஒரு eraserம் crackerம் இதனை நெருங்க முடியாது இதை நான் மட்டும் கூறவில்லை android osஐ வடிவமைத்த Andy Rubinம் இதைத்தான் கூறுகிறார் சிந்தித்து பாருங்கள் இது வரை மொபைல் போன்
virusஆல் தாக்கப்பட்டு செயலிலந்து விட்டது என
யாராவது கூறி கேள்வி பட்டுள்ளீர்களா ? அப்படி ஆகியிருந்தால் அது Root செய்யப்பட்ட மொபைலாகத்தான் இருக்கும்
ஏனெனில் அதுமட்டுமே secure செய்யப்பட்டதை மீறிய ஒன்று
இதை நான் சாதாரணமாக கூறவில்லை முழுக்க
முழுக்க சோதித்த பின்னரே இதை உடனடியாக இங்கு பதிவிடுகிறேன் anti virus install செய்வது anti Theftற்காகவே தவிர அதனால் virusஐ முழுமையாக நீக்க முடியாது இதை புரிய வைக்க இன்னொரு பதிப்புதான் போட வேண்டும்
ஆக தனது மொபைலின் வேகம் குறைவாக இருப்பதாக உணருபவர்கள் இதனை உடனே uninstall செய்துவிடுங்கள் வேகத்தையாவது சற்று அதிகப்படுத்தலாம்
See more:  www.masinfom.blogspot.com

வியாழன், 28 ஜனவரி, 2016

உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:

iPhone_7_illustration_Yasser_Farahi_1000e

அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள்  நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை  சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம்.   ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு :

*மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய  புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத  டாக்குமெண்ட்டுகளை  நீக்குவதும்    மிக  அவசியமே .  நூற்றுக்கணக்கான  அளவு புகைப்படங்கள்  இருப்பின் அவற்றை   கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது.

*அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும்  . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் . இவை எந்த அளவுக்கு  இடங்களை  ஆக்கிரமித்து கொண்டுள்ளன என்பதை அறிய  போனில்  Settings > General > Storage & iCloud Usage > Manage Storage.- க்கு சென்று பார்த்தால் அறியலாம் . இதனால் மிக முக்கியமான பயன்பாடுகளை மட்டும் சேமித்து வைப்பது நன்று.

*பழைய குறுந்தகவல் செய்திகளை    மாதக்கணக்கில் வைத்திருந்தால்   அது மொபைலின் வன்பொருளை பாதிக்கும் வாய்ப்புண்டு.இதற்கு தகுந்த தீர்வு  என்னவென்றால் உங்கள் போனில் உள்ள குறுந்தகவல்களை குறிப்பிட்ட கால வரையறைக்கு மட்டும் சேமித்து  வைத்திருக்கும்  அமைப்புகளை அமைத்துவிட்டால்  அவை குறிப்பிட்ட காலம் வரைக்கும்  இன்பாக்ஸில் காணும்படி செய்யலாம்.இதற்கு  Settings > Messages > Keep Messages. என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.

*ஐபோனை உங்களது கணினி போன்று பயன்படுத்த வேண்டும். அதாவது  அடிக்கடி இணைய தேடல் வரலாறுகளை  நீக்கிக்  கொண்டே இருப்பது அவசியமே. இடைமாற்று நினைவகம் என்று கூறப்படுகின்ற அதாவது  பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகத்தினை  அடிக்கடி அழித்து  விடுவது அவசியம் . இதற்கு  மொபைலில் Settings > Safari,-க்கு சென்று  Clear History and Website Data  வை தட்டினால் போதும்.

*உங்கள் ஐபோன் மெதுவாக இயங்க ஒரு முக்கிய காரணம் அதிலிருக்கும்  பயன்பாடுகளின்  ஆட்டோ  அப்டேட்டுகலாகத்தான் இருக்கும். தேவையற்ற பயன்பாடுகளின் அப்டடேட்டுகளை நீக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு உங்கள் மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று    OFF MODE  யை  தேர்ந்தெடுக்க வேண்டும்.

*மேற்கூறியது போன்றே  ஆட்டோமேட்டிக்  அப்டேட்டுகளை  தேவையற்ற இசை ,நூல்கள் போன்றவற்றை பதிவிறக்கங்கள் செய்யாமல்   தவிர்கும்படி  செய்யலாம்.இதற்கு  மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று   apps, books, music -இல்   OFF MODE  யை தட்டினால் போதும்.

*மேலும் அடிக்கடி உங்கள் மொபைலில்  உங்களுக்கு அருகிலிருக்கும் வை-பை இணைப்புகளுடன் இணைக்கவா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலை கொடுத்தால் அது  உங்கள் சாதனத்தை மிக மெதுவாக செயல்பட வைக்கும். இதனை  நீக்க   Settings > Wi-Fi > Ask to Join Networks  இல்   OFF MODE  யை தேர்ந்தெடுக்க வேண்டும் .

*அன்றாடம்  முடிந்த வரையில் ஒருமுறையாவது  ஐபோனை ரீஸ்டார்ட் செய்வதும் மொபைல் வேகத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றே ! இதனால் ஐபோன் அடிக்கடி மந்தாமாகாமல் தடுக்கலாம்.

*பேட்டரி டாக்டர் என்ற பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் ஐபோன்கள் எவ்வளவு மெதுவாக  இயங்குகிறது என்பதை அறியலாம். மெதுவாக இயங்குகிறது என்றால் அதிலுள்ள நினைவகத்தை மறு  ஒதுக்கீடு செய்து  வழங்க உதவுகிறது.

இது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தால்  ஐபோனின் ஆயுள்காலத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கல் ஐபோன் சாதனம்   மெதுவாக செயலபாடாமல் தடுக்கலாம்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க


தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்  ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
 
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
 
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
 
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
See More Info:  www.masinfom.blogspot.in

திங்கள், 13 ஏப்ரல், 2015

வைரஸிற்கு ஆப்பு வைப்பது எப்படி?


A user's photo.


முதலில் உங்கள் கணினியின் Desktop ல் Flash எனும் பெயரில் அல்லது உங்கள் பெயரில் Folder அதன்பின் நீங்கள் Shift key ஐ அழுத்திக் கொண்டு Flash அல்லது Momory Card ஐ கணினியில் இணைக்க வேண்டும்.(வைரஸ் தானாக பரவாமல் தடுக்க..)

My Computer ல் Right Click செய்ய வரும் Window ல் Manage ல் Click செய்ய Computer Management வரும். அதில் Disk Management ஐ தெரிவுசெய்தால் உங்கள் கணினியில் இருக்கும் Drive கள் தோன்றும். அதில் உங்கள் Flash ஐ Right Click செய்ய வரும் Window ல் Change Drive Letter and Paths ல் Click செய்ய வரும் Window ல் Remove எனும் Button ஐ Click பண்ணியபின் வரும் Confirm Message Box ல் Yes ஐ தெரிவு செய்யுங்கள்.

அதன் திருப்ப உங்கள் Flash I Right Click செய்து Change Drive Letter and Paths ல் Click செய்து பின் Add எனும் Button ஐ Click பண்ணுங்கள். பின் Mount in the following empty NTFS folder ஐ தெரிவு செய்தபின் Browse ஐ Click பண்ணுங்கள். அதன்பின் தோன்றும் Window ல் நீங்கள் Desktop ல் உருவாக்கிய Folder ஐ தெரிவு செய்யுங்கள். பின் OK ஐ click பண்ணுங்கள். இப்போது உங்கள் கணினியின் My Computer ல் இருந்து உங்கள் Flash மறைந்துவிடும். Desktop ல் நீங்கள் உருவாக்கிய Folder உங்கள் Flash ஆக மாறிவிடும்.

உங்கள் Flash ல் வைரஸ் இருந்தால் உங்கள் Flash ஐ உங்கள் கணியுடன் இணைக்கும் போது Auto வாக உங்கள் கணினிக்கு வைரஸ் வராது தடுக்கப்படும். அதேபோல் உங்கள் கணினியில் வைரஸ் இருந்தால் கணினியின் My Computer ல் Flash இல்லாததால் Flash ற்கு வைரஸ் வராது தடுக்கப்படும். இதனால் Flash மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும். உங்களுக்கும் Open செய்யவும் இலகுவாக இருக்கும். Open with பிரச்சனையும் வராது.

seee more: www.masinfom.blogspot.com

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

Avast இலவச Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்

அவாஸ்ட் என்றாலே அது ஒரஅன்டிவைரஸ் என்று மட்டும் தானே உங்களுக்கு தேதியும் நீங்கள் அறியாத பல சிறப்பம்சங்களும் உள்ளன.இதில் காணப்படும் சிறப்பம்சங்கள்

Avast இலவச Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்
குறிப்பு: கீழ் காணப்படும் விடயங்கள் இலவசமாகும்.

1. நிறுவியுள்ள App களை தன்னிச்சையாக பாதுகாப்பற்றவைக்கெதிராக அலசும் (Scan).

2. நினைவகத்தில் சேமிக்கப்பட்டடுள்ளவை , நிறுவப்படும் மென்பொருள் மற்றும் உளவு மென்பொருட்கள்-உள்ளனவா என அலசும்.

3. அலச வேண்டிய நேரத்தை குறிப்பிடலாம், உதாரணம் தொலைபேசியானது பயன்படுத்தப்படாத நேரத்தில் அலச அனுமதித்தால் நீங்கள் தொலைபேசியைப் பாவிக்கும்போது இதுக்கென பிரதான நினைவகத்தை (RAM) வழங்கத்தேவையில்லை.

4. நீங்கள் நிறுவியுள்ள மென்பொருட்களில் ஏதாவது பாதுகாப்பற்ற அனுமதிகளை (Permissions) கொண்டிருக்கிறதா என அலசலாம்.

5. உங்களை தேவையற்ற நபர்கள் அழைப்பினை ஏற்படுத்தி அல்லது குறுஞ்செய்தி மூலம் தொந்தரவு செய்தால் அவர்களின் அழைப்பை (இலக்கம் மூலம்) இதன் மூலம் தடுக்கலாம் (Block).

6. பாதுகாப்பற்ற இணையத்தளங்கள், உங்கள் நினைவகத்தை முற்று முழுதாக அழிக்கக்(Wipe) கூடிய USSD இலக்கங்கள் ஆகியவற்றைத்தடுக்கும்.

7. இணைய முகவரியை தவறாக தட்டச்சுச் செய்தால் அதனைச் சரிசெய்யும்.

8. இணையத்தளத்திற்காக செலவுசெய்யப்படும் தரவின் அளவினை சோதிக்கலாம். (Data Usage).

வாசிக்க: கைபேசி இணையச் செலவைக் குறைப்பதெப்படி

9. உங்கள் தொலைபேசியானது Root செய்யப்பட்டிருந்தால் Hacker களுடைய உள்நுளைவை Firewall வடிப்பு (Filter) மூலம் தடுக்கும்.

10. ஏதாவது இரண்டு மென்பொருட்களை பாதுகாப்பு இலக்கம் (PIN) அல்லது வடிவ பாதுகாப்பு (Pattern) முறை மூலம் பாதுகாக்கலாம் (Lock).

11. தொடர்பு இலக்கங்கள் (Contacts), குறுஞ்செய்திகள் (SMS), அழைப்பு சேமிப்புக்கள் (Call Logs) ஆகியவற்றை Backup செய்யலாம்.

Avast திருட்டு தடுப்பான் (Anti-theft)
உங்கள் தொலைபேசியை யாராவது திருடிவிட்டால்,

இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com

1. அது எங்கிருக்கின்றதென கண்டுபிடிக்கலாம்.

2. உங்கள் தரவுகளை வேறு கணினியிலிருந்து அழித்விடலாம் (wipe memory).

3. வேறு கணினியிலிருந்து தொலைபேசியின் பாதுகாப்பு முறையை மாற்றலாம் (Lock).

4. தொலைபேசியின் SIM ஆனது மாற்றப்பட்டால் அதற்க்கான Notification ஐ பெறலாம்.வாசிக்க: பாதுகாப்பான கடவுச் சொற்களை உருவாக்குவது எவ்வாறு?

Avast Pro Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்.

குறிப்பு: கீழ் காணப்படும் நன்மைகளைப்பெற மாதம் 1.99 $ அல்லது வருடம் 14.99 $ செலுத்த வேண்டும்.

1. எத்தனை மென்பொருட்களை வேண்டுமானாலும் Lock செய்யலாம்.

2. விளம்பரங்களை ஆராய்ந்து அவர்கள் அதன் மூலம் உங்களைக் கண்காணிக்கிறார்களா என்பதை அறியலாம்.

3. உங்கள் தொலைபேசி திருடப்பட்டுவிட்டால் உங்களுடைய தரவுகளை (data) வேறு கணினியிலிருந்துகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
(இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com)

4. யாராவது உங்கள் தொலைபேசியை Unlock செய்ய அதிக தடைவைகள் முயற்சித்தால் அவர்களுடைய புகைப்படத்தை முன் கமரா மூலமும் குரலினை Mic மூலமும் எடுத்து அனுப்பும்.
(இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com)

5. அனைத்து தரவுகளையும் Backup எடுக்கலாம் உதாரணம் நீங்கள் அத் தொலையேசியில் Game விளையாடியிருந்தால் அந்த Game இல் நீங்கள் எந்த level வரை சென்றிருந்தீர்களோ அதே level இனையும் Backup எடுக்கும் (Data backup).

6. Geo-Fencing என்ற முறை மூலம் நீங்கள் குறிப்பிட் எல்லையை வழங்கியி
ருந்தால் உதாரணமாக நீங்கள் வேலைசெய்யுமிடமானது 500 மீட்டர் விட்டமுடையதாகவிருந்தால் அதனை நீங்கள் வழங்கிவிட்டால் யாராவது உங்கள் தொலைபேசியினை திருடிக்கொண்டு நீங்கள் வழங்கிய எல்லையைத்தாண்டினால் Lock ஆகிவிடும், அல்லது தொலைபேசி இருக்கும் (Location)இடத்தை அனுப்பும்.

(இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com)

குறிப்பு: மேற்குறிப்பிட்டவற்றில் Lock ஆக வேண்டுமா? Location ஐ அனுப்ப வேண்டுமா என்பதை நீங்கள் முன்னரே தெரிவுசெய்திருக்க வேண்டும்.

மேற்க்கூறப்பட்ட தொலைபேசியை தொலைத்தபின்னர் கண்காணித்தல் போன்ற விடையங்களுக்கு http://my.avast.com என்ற தளத்தினுள் உள்நுளைய வேண்டும், உள்நுளையத் தேவையான கடவுச்சொல் போன்ற விடையங்களை நீங்கள் தொலைக்க முன்னரே செயற்படுத்தி வைத்திருத்தல் வேண்டும்.
இதில் காணப்படும் சிறப்பம்சங்கள்

Avast இலவச Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்

குறிப்பு: கீழ் காணப்படும் விடயங்கள் இலவசமாகும்.

1. நிறுவியுள்ள App களை தன்னிச்சையாக பாதுகாப்பற்றவைக்கெதிராக  அலசும் (Scan).

2. நினைவகத்தில் சேமிக்கப்பட்டடுள்ளவை , நிறுவப்படும் மென்பொருள் மற்றும் உளவு மென்பொருட்கள்-உள்ளனவா என அலசும்.

 3. அலச வேண்டிய நேரத்தை குறிப்பிடலாம், உதாரணம் தொலைபேசியானது பயன்படுத்தப்படாத நேரத்தில் அலச அனுமதித்தால் நீங்கள் தொலைபேசியைப் பாவிக்கும்போது இதுக்கென பிரதான நினைவகத்தை (RAM) வழங்கத்தேவையில்லை.

4. நீங்கள் நிறுவியுள்ள மென்பொருட்களில் ஏதாவது பாதுகாப்பற்ற அனுமதிகளை (Permissions) கொண்டிருக்கிறதா என அலசலாம்.

5. உங்களை தேவையற்ற நபர்கள் அழைப்பினை ஏற்படுத்தி அல்லது குறுஞ்செய்தி மூலம் தொந்தரவு செய்தால் அவர்களின் அழைப்பை (இலக்கம் மூலம்) இதன் மூலம் தடுக்கலாம் (Block).

6. பாதுகாப்பற்ற இணையத்தளங்கள், உங்கள் நினைவகத்தை முற்று முழுதாக அழிக்கக்(Wipe) கூடிய USSD இலக்கங்கள் ஆகியவற்றைத்தடுக்கும்.

7. இணைய முகவரியை தவறாக தட்டச்சுச் செய்தால் அதனைச் சரிசெய்யும்.

8. இணையத்தளத்திற்காக செலவுசெய்யப்படும் தரவின் அளவினை சோதிக்கலாம். (Data Usage).

வாசிக்க: கைபேசி இணையச் செலவைக் குறைப்பதெப்படி

9. உங்கள் தொலைபேசியானது Root செய்யப்பட்டிருந்தால் Hacker களுடைய உள்நுளைவை Firewall வடிப்பு (Filter) மூலம் தடுக்கும்.

10. ஏதாவது இரண்டு மென்பொருட்களை பாதுகாப்பு இலக்கம் (PIN) அல்லது வடிவ பாதுகாப்பு (Pattern) முறை மூலம் பாதுகாக்கலாம் (Lock).

11. தொடர்பு இலக்கங்கள் (Contacts), குறுஞ்செய்திகள் (SMS), அழைப்பு சேமிப்புக்கள் (Call Logs) ஆகியவற்றை Backup செய்யலாம்.

Avast திருட்டு தடுப்பான் (Anti-theft)

உங்கள் தொலைபேசியை யாராவது திருடிவிட்டால்,
இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com

1.  அது எங்கிருக்கின்றதென கண்டுபிடிக்கலாம்.

2. உங்கள் தரவுகளை வேறு கணினியிலிருந்து அழித்விடலாம் (wipe memory).

3. வேறு கணினியிலிருந்து தொலைபேசியின் பாதுகாப்பு முறையை மாற்றலாம் (Lock).

4. தொலைபேசியின் SIM ஆனது மாற்றப்பட்டால் அதற்க்கான Notification ஐ  பெறலாம்.

சனி, 24 ஜனவரி, 2015

ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி?

கணினி மற்றும் லாப்டாப் பயன்படுத்தும் பலரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளில் வைரஸ் தாக்கும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சில வைரஸ்களை சாதாரணமாக பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை கொண்டு எளிதாக அழித்து விட முடியும். பெரும்பாலான வைரஸ்களை அழிப்பது சற்று சிரமமான காரியமாக தோன்றும், ஆனால் அவைகளையும் எளிதாக அழிக்க முடியும். அந்த வகையில் சிலருக்கு ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி என்று தெரியாமல் இருக்கும்.

ஷார்ட்கட் வைரஸ்களை CMD கொண்டு அழிப்பது எப்படி?


1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள்.

2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

3. பென் டிரைவ் அல்லது யுஎஸ்பி டிரைவ் சென்று "del*.lnk" டைப் செய்து அனைத்து லின்க் ஃபைல்களையும் டெலீட் செய்யுங்கள்

4. அடுத்து attrib -h -r -s /s /d g:\*.* டைப் செய்து என்டர் பட்டனை அழுத்துங்கள்

5. இப்பொழுது உங்களது கருவிகளில் இருந்த பழைய ஃபைல்கள் அனைத்தும் காணப்படும், அவைகளை பத்திரமாக வேறு போல்டருக்கு மாற்றிவிட்டு உங்கள் கருவியை ஃபார்மேட் செய்து பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

நன்றி /அன்பைத்தேடி

வியாழன், 6 நவம்பர், 2014

கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!

தினமும் புதிய  புதிய வைரஸ்களும், மால்வேர்களும் உருவாக்கப்பட்டு இணையம் கணினிகளைத் தாக்கி, கணினிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.
ஹேக்கர்கள் என அழைக்கப்படும் இணைய வழி நுட்ப திருடர்களின் வேலை இது. ஏதாவது ஒரு இணைப்பின் (Link) மூலமாகவோ அல்லது தரவிறக்கம் மேற்கொள்ளும்பொழுது (Download) அதனுடன் இணைந்து இந்த தீங்கிழைக்கும் மென்பொருளும் கணினியில் நுழைந்துவிடுகிறது.
To protect your computer from malware attack Microsoft's System Sweeper
இது நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. இதனை ஆண்டி வைரஸ் மென்பொருள்களின் மூலமே கண்டறிய முடியும்.

சில சமயம் இந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் தொகுப்பையும் (Anti virus sofware) மீறி சில மால்வேர்கள் கணினியில் தம்முடைய வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். இத்தகைய மால்வேர்களை கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் ஆண்டி வைரஸ் மென்பொருளால் கண்டறிந்து அழிக்க முடியாது.
அதுபோன்ற சமயங்களில் மால்வேர் தொகுப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் System Sweeper என்ற மென்பொருளை வழங்குகிறது. இது முற்றிலும் இலவசமே..
இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் பதிந்திருந்தாலும் கூட பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்துவதால் மால்வேர் பாதிப்பிலிருந்து உங்களுடைய கணினியை நீங்கள் பாதுகாத்திட முடியும். ஆண்டி வைரஸ் மென்பொருளுடன் மைக்ரோசாப்டின் சிஸ்டம் ஸ்வீப்பர் மென்பொருளையும் பயன்படுத்துவதால் உங்கள் கணினிக்கு கூடுதல் பாதுக்காப்பு கிடைக்கும்.

சிஸ்டம் ஸ்வீப்பர் மென்பொருளின் பயன்கள்: (Features of System sweeper)

  • இது மால்வேர் மற்றும் ஸ்பைவேர் நச்சு நிரல்களுக்கு எதிராக திறமையாக செயல்பட்டு அவற்றை நீக்கிட உதவுகிறது.
  • மைக்ரோசாப்டின் தயாரிப்பு என்பதால் நம்பகத்தன்மை அதிகம்.
  • இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இம்மென்பொருளைப் பயன்படுத்த முடியும். எனவே இணைய இணைப்பு இல்லாத கணினியில் நிறுவியும் பயன்படுத்தலாம்.
  • நேரடியாக கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது என்றாலும் Removal Device களான Pendrive, CD, DVD போன்றவைகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
  • அதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் இதை எளிதாக எடுத்துச்  செல்லலாம்..
  • நீங்கள் வெளியிடங்களில் மற்ற கணினிகளைப் பயன்படுத்தும்பொழுதும் அக் கணினியை  இம்மென்பொருள் மூலம் மால்வேர் உள்ளதா என சோதித்து அறிந்துகொள்ள முடியும்.
  • வைரஸ் பிரச்னை காரணமாக உங்களுடைய கணினி Boot ஆகவில்லை என்றால் இம் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்கும் சிடியைப் பயன்படுத்தி பூட் செய்து கொள்ள முடியும் என்பது இம்மென்பொருளின்  கூடுதல் பயன். அவ்வாறு கணினியை தொடங்கச் செய்யும்பொழுது, கணினி boot ஆகாமல் தடுத்த வைரஸ், மால்வேர்களை, அழித்து, கணினி பூட் செய்கிறது.
  • இந்த  மென்பொருள் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் (Malware and spyware attacks) தாக்குதலிருந்து கணினி பாதுகாக்க மட்டுமே அன்றி ஒரு முழுமையான ஆண்டி வைரஸ் மென்பொருள் இல்லை. அதனால் ஏற்கனவே உங்கள் கணனியில் உள்ள ஆண்டி வைரஸ் மென்பொருளை அப்படியே பயன்படுத்துங்கள்..
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:Download Free Microsoft’s System Sweeper Sys32Bit

 Download Free Microsoft’s System Sweeper Sys64Bit
 
நன்றி.
-தங்கம்பழனி

Informations
Read More
Englisn==>> http://masinfom.blogspot.in/

Popular Posts

Facebook

Blog Archive