Reliance Jio | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Reliance Jio

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Reliance Jio லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Reliance Jio லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 அக்டோபர், 2016

Jio 4G may remain free until March 2017 - ஜியோ 4ஜி : மார்ச் 2017 வரை எல்லாமே இலவசம் தான்!

ஜியோ சிம் வாங்கிட்டீங்கனா, இந்தச் செய்தி உங்களுக்கானது தான். ஜியோ சிம் இலவச சேவைகளை டிசம்பர் மாதம் வரை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் காலக்கெடு மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட

ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜிசேவைகளை இலவசமாக வழங்கி மற்ற நிறுவனங்களின் சேவை கட்டணத்தையும் குறைக்க வைத்தது. ஜியோ பாதிப்பில் சிக்கிய நிறுவனங்கள் இன்று வரை தங்களின் சேவை கட்டணங்களைக் குறைத்து வருகின்றன. செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு காரணங்களைக் காட்டி புதுப்புது சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜியோ சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கும் காலக்கெடு டிசம்பர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக டிராய் அறிவித்தது. இந்நிலையில்ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை மேலும் சில காலம் வரை நீட்டிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தகவல்

வெளியாகியிருக்கும் புதிய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ தனது டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை மார்ச் 2017 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

வரவேற்பு

100 மில்லியன் என்ற பயனாளர் எண்ணிக்கையை அடைய ரிலையன்ஸ் ஜியோ தனது அறிமுகச் சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

டிராய்

டிராய் விதிமுறைகளின் படி எந்த டெலிகாம் நிறுவனமும் தனது சேவைகளை 90 நாட்களுக்கும் அதிகமாமக இலவசமாக வழங்க முடியாது, இருந்தும் அறிமுகச் சலுகையின் போது வழங்கப்படும் சலுகைகளுக்கு எவ்வித விதிமுறைகளும் இல்லை எனச் சந்தை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி

பயனர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைப் பின்பற்றாமல் இருப்பது அவர்களை ஏமாற்றுவதற்குச் சமமானது என ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கட்டணம்

ஜியோ சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஜியோ அறிவித்த சேவைகளைப் பயனர்கள் முழுமையாக அனுபவிக்கும் வரை ஜியோ சேவைகளை இலவசமாகப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு உள்ளது என டிராய் மற்றும் அரசாங்கத்திடம் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோவின் திட்ட மேலாண்மை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

அனுமதி

மேலும் பயனர்களுக்கு இலவச ஜியோ சேவைகளை வழங்க டிராய் அனுமதி தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்டர்கணெக்ஷன் சார்ந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் வரை ஜியோ பல்வேறு வித்தியாச தீர்வுகளைப் பெற ஜியோ முயற்சிக்கும்.

மாற்றம்

டிராய் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ விதிமுறைகளை வைத்துப் பார்க்கும் போது ஜியோ தனது சேவைகளை நீட்டிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெலிகாம் சந்தையைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதன், 3 ஆகஸ்ட், 2016

Popular Posts

Facebook

Blog Archive