Train info | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Train info

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Train info லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Train info லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜூலை, 2017

ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது ஏன் தெரியுமா ?

ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது ஏன் தெரியுமா ?

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து
இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற  சீட் ஒரு முறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்படகேட்டிருப்போம்.

ஆனால் இது ஏன் எதனால் 

பஸ்களில் விருப்பமான சீட்  புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என  நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ?


உண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்...
தியேட்டரும்  ரயில் வண்டியும் !

நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம். ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. 

ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம். ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

கோச்!
பொதுவாக_ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.

டிக்கெட்_புக்_ஆகும்_முறை !

நீங்கள்_டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.
பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.

புவியீர்ப்பு_மையம் ! 

ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

கடைசி_நேரத்தில்...

கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம். அன் ரிஸர்வ்ட்  கோச்சுகள் ரயிலின் முன்புறம் ,மற்றும் பின்புறம் இணைப்பதற்கும் காரணம் உண்டு ..

சற்று_யோசியுங்கள்!

நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு. இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது. Claim Free Dogecoins

Popular Posts

Facebook

Blog Archive