cycling | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: cycling

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

cycling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cycling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 நவம்பர், 2018

புயல் எப்படி உருவாகிறது...* *புயல் என்றால் என்ன..*


*புயல் எப்படி உருவாகிறது...*

*புயல் என்றால் என்ன..*

கொஞ்சம் பெரிய பதிவுதான்

புயல் உருவாகும் போதெல்லாம் துறைமுகங்களில் ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்படுவதாக அறிவிக்கிறார்களே, இவை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கின்றன? இதனால் என்ன பயன்?

முதலில் புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன? தாழ்வுநிலை என்றால் என்ன? சுழற்காற்று என்றால் என்ன?

தண்ணீரின் இயல்பு , பள்ளத்தை நோக்கிப் பாய்வது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம். ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.

காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை வீசினால் அதற்கு (காற்று) அழுத்தம் (Depression) என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் (Deep Depression). 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் (Cyclonic strom). அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).

Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தை.

புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்....
இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு.

இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க… எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.

*புயல் எப்படி உருவாகிறது*

புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும்.

வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.

புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்

வங்காள விரிகுடாவில் சமீபத்தில் உருவான புயல்களின் பெயர்கள் என்ன தெரியுமா? பைலின், ஹெலன், லெஹர். அடுத்து வரவிருப்பது மடி புயல். இந்தப் பெயர்களுக்கு என்ன அர்த்தம்?

பைலின் (நீலக்கல்), ஹெலன் (பிரகாச ஒளி), லெஹர் (அலை). சரி, புயலுக்குப் பெயர் வைப்பது அவசியமா? இதற்கான விடையைப் பின்னால் பார்ப்போம்.

சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த காற்று ஓடோடி செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன.

புயலின் வகைகள்...
புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.

இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.

அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகு

திகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.

பெயர் சூட்டுதல்

அடுத்ததாக ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.

பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன..
இந்தியப் பெருங்கடலில்…

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு.

புயல் கூண்டுகள் குறித்த விளக்கம்

புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :

ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.

இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.

5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.

8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.

10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்...

Popular Posts

Facebook

Blog Archive