key | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: key

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

key லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
key லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஜூலை, 2016

உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என ஏராளமான கீபோர்ட் செயலிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.
ஆண்ட்ராய்டு தமிழ் கீபோர்ட்
அவற்றுள் கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியானது என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.


கூகுள் நிறுவனத்தால் உருவாக்கி நிர்வகிக்கப்படும் இதற்கு அண்மையில் அட்டகாசமான மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட  கீபோர்ட் செயலி மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளை மிக இலகுவாக எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்ய முடியும்.
மேலும் இதன் அண்மைய மேம்படுத்தலானது குறிப்பிட்ட செயலியை பல வர்ணங்களில் பயன்படுத்த வழிவகுத்துள்ளதுடன் தமக்கு விரும்பிய புகைப்படங்களை அதன் பின்புலப்படமாக இணைத்து பயன்படுத்தவும் உதவுகிறது.
இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.

கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

  • கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியை நிறுவிய பின் அதனை திறந்துகொள்க.

  • பின்னர் அதில் Keyboard > Theme எனும் பகுதிக்கு செல்க.

  • இனி My Image என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியின் பின்புலப்படமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


அவ்வளவுதான்! இவ்வாறு உங்கள் அன்புக்குரிய நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி உங்கள் அன்பை வெளிப்படுத்தலாமே!

Popular Posts

Facebook

Blog Archive