rural development | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: rural development

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

rural development லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rural development லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஜனவரி, 2019

உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா ....? என்ன செய்ய வேண்டும் ? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும் ? எப்படி புகார் அனுப்ப வேண்டும் ?. எப்படி எழுதுவது ?

உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா ....?
என்ன செய்ய வேண்டும் ? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும் ?
எப்படி புகார் அனுப்ப வேண்டும் ?. எப்படி எழுதுவது ?

அந்த தார் சாலை பற்றிய விபரங்களை உங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் / வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலர் /துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பணிகள் ) அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பி அந்த தார் சாலை பற்றிய விபரங்களை பெறுங்கள் .,

அதன் பின்  புகார் மனு எழுதுங்கள் ...,

புகார் மனுவில் பொது மக்கள் கையொப்பம் குறைந்தது 10 நபர்கள் கையொப்பம் பெறுங்கள் .,

புகார் மனுவை அனுப்ப வேண்டிய முகவரி.,

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்புங்கள் .,

புகார் கொடுப்பதற்கான அடிப்படை காரணங்கள் (GROUNDS OF MAKING COMPLAINT):

          1.  தரமில்லாத தார் சாலையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு   
               அடைந்துள்ளனர்
           2.  தரமில்லாத தார் சாலையை போட்ட ஓப்பந்தகாரர் மீது
                நடவடிக்கை எடுக்கவும்.
           3.  தரமில்லாத தார் சாலை அமைக்கும்போது ஆய்வு செய்த 
                மேற்பார்வையாளர்,  சாலை பொறியாளர் ஆகியவர்கள் மீது
                நடவடிக்கை எடுக்கவும்.
           4.  தரமில்லாத தார் சாலையை ஆய்வு  
                வளர்ச்சி (கிராம-ஊராட்சி) அவர்கள் மீது நடவடிக்கை 
                எடுக்கவும்.
            5.  தரமில்லாத தார் சாலையை சீரமைத்து தருமாறு
                 கேட்டுக்கொள்கிறோம்.
             6.  பொது மக்களின் வரி பணத்தை தவறாக பயன்படுத்திய
                 அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை
                 எடுத்து,அதனை புகார்தாரர் ஆகிய எங்களுக்கு
                 தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்....

புகார் மனுவில் நகல் என்று போட்டு...

1.முதல் அமைச்சர் தனி பிரிவு ,முகவரி.
2.குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2(7)இன் கீழ் உங்கள் வட்டத்திற்கு/தாலுக்கா க்கு உட்பட்ட மாஜிஸ்ட்ரேட் அவர்கள் முகவரி.
3.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,முகவரி.
4.வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலகம் ,முகவரி.

ஆகியோருக்கும் அனுப்பவும் 

குறிப்பு : நீங்கள் முதலிலேயே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்  ஆவணங்கள் / ஆதாரங்கள் பெற்ற பின்..அவைகளையும் இணைத்து புகார் அனுப்புவது கூடுதல் வலு சேர்க்கும்,  அதுவே உசிதமானது .,

தங்கள் பகுதியை ஊழல் இல்லாத ஊராக மாற்ற முதல் படியை எடுத்து வையுங்கள்..வாழ்த்துக்கள்..!!
Akram Khan

Popular Posts

Facebook

Blog Archive