school | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: school

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

school லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
school லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜூன், 2018

*பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்*

*Excellent article by.   Dr.Alok Kar*
தமிழாக்கம்: *அ. மயில்சாமி, தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கண்ணம்பாளையம்*

*பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்*

பல ஆண்டுகளுக்கு முன்பு, *சாதாரண, படிப்பறிவற்ற பெற்றோர்* தங்கள் குழந்தைகளை
🔹 மருத்துவர்கள்,
🔹 பொறியாளர்கள்,
🔹 அறிவியலாளர்கள்,
🔹 கணக்காளர்கள்,
🔹 வழக்குரைஞர்கள்,
🔹 கட்டிடப் பொறியாளர்கள்,
🔹 தொழிலதிபர்கள் எனப்படும் *Group 'A'* குழந்தைகளை உருவாக்கினார்கள்.

இந்த *Group 'A* குழந்தைகளில் பெரும்பாலும், தொடக்கப் பள்ளியிலிருந்து,தாங்களே போராடி, *மிகப் பெரிய பதவிகளை* அடைந்தனர். அவர்கள்
👉🏾 *வெறுங்காலில் நடந்தனர்*
👉🏾 *காடுகளுக்குச் சென்றனர்*
👉🏾 *தண்ணீர் பிடித்தும், விறகு சேகரித்தும் வேலை செய்தனர்*
👉🏾 *செல்லப் பிராணிகளைக் கவனித்தனர்*
👉🏾 *வாழ்க்கை நடத்த, பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை செய்தனர்*

இன்றோ *Group A* பெற்றோர் *Group 'B'* குழந்தைகளை உருவாக்குகின்றனர்.
இந்த *Group B* குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் மீது
🔹 அதிக கவனம் செலுத்துகின்றனர்
🔹 பாலர் பள்ளி முதல், கல்லூரி வரை, அவர்களது வீட்டுப் பாடம், செய்முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உதவுகின்றனர்.
🔹 குழந்தைகள், அதிகக் கட்டணம் பெறும் பள்ளிக்குச் செல்ல, தனிக் கார், ஓட்டுனர், வெளிநாட்டில் படிப்பு எனப் பல வசதிகளைத் தருகின்றனர்.
🔹 குழந்தைகளால், காலை முதல் இரவு வரை, திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது.
🔹 குழந்தைகளை, ராஜா, ராணிகளைப் போல, அதிக மதிப்புக் கொடுத்து, வளர்க்கின்றனர்.
🔹 வீட்டில், குழந்தைகள், சிறு வேலைகளைக் கூட செய்வதில்லை.
🔹 உணவு, மேசைக்கு வந்து விடுகிறது.
🔹 சாப்பிட்ட தட்டுகள் கூட பெற்றோராலோ, வேலைக்காரிகளாலோ கழுவப்படுகின்றன.
🔹 விலையுயர்ந்த துணிமணிகள், போக்குவரத்துச் சாதனங்கள் முயற்சியின்றிக் கிடைக்கின்றன.
🔹 *பணம் வீணாகிறதே என்ற கவலையில்லை* !!!.
🔹 பெற்றோர் இத்தனை உதவிகள் செய்தும்
� அவர்களுள் ஒரு சிலரால் மட்டுமே, சரியாகப் *பேசவும்* or *எழுதவும்* முடிகிறது. 😏

� *Group 'A' குழந்தைகள் * தங்கள் பெற்றோரையும் | குழந்தைகளையும்* நன்கு கவனித்துக் கொண்டனர். *Group 'B', பெற்றோர் தங்கள் குழந்தைகள் 30+ வயதைக் கடந்த பிறகும், சொந்தக்காலில் நிற்க வைக்க உதவுகின்றனர்*.‼
� உதவி பெற்றே வளர்ந்த குழந்தைகள் இன்றும் பெற்றோரின் உதவியையே நாடுகின்றனர். தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள இயலாத போது, பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் உதவுவது எப்படி?
இறுதிக் காலத்தில், பெற்றோர், தாங்களே வாழ வேண்டியுள்ளது.

😴 *நீங்கள் இதில் எந்த வகை*❓
🏮 தேவையின்றி குழந்தைகளுக்கு வலியச் சென்று உதவாதீர்கள்.
🏮 உங்கள் குழந்தைகள் *அறிவாளியாக, புத்திசாலியாக, பலசாலியாக வளரட்டும்*.
🏮 வாழ்க்கையின் *நிதர்சனம், உண்மைகளை* நேரடியாகச் சந்தித்து *தானாகச் செயல்படும் இளைஞராக வளரட்டும்*
👉🏾 கடினமான நேரங்களை எதிர்கொள்ள
👉🏾 மற்றவர்களை மதிக்க
👉🏾 தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.
� உங்கள் பெற்றோரால் முறைப்படி  வளர்க்கப்பட்ட நீங்கள், உங்கள் குழந்தைகளையும் *பயனுள்ள* குழந்தைகளாக வளருங்கள்...
💐*மனம் நிறைந்த வாழ்த்துகள்*💐

Popular Posts

Facebook

Blog Archive