website language | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: website language

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

website language லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
website language லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஜூன், 2017

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள்.!


Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள்.!
Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்? ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் .
Web Development Language என்ன ?
இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது.

1. W3Schools - http://www.w3schools.com/
மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட மொழியில் உங்களுக்கு Knowledge இருக்க வேண்டும்.

2. Hscripts - http://www.hscripts.com/tutorials/index.php
இந்த தளமும் மேலே உள்ளதை போல எளிமையாக சொல்லி தருகிறது. Flash, JSP, UNIX commands, Perl போன்றவற்றையும் படிக்கும் வசதி உள்ளது.

3. HTML Codes, Tags and  CSS,போன்றவற்றை படிக்க சிறந்த தளம்.

https://html.com/      (formerly Quackit )

4. HTML.net - http://www.html.net/
HTML, CSS, PHP, Java Script போன்றவற்றை படிக்க சிறந்த தளம்.

5. jQuery - http://jquery.com/
Query ஆனது ஒரு தளத்தின் செயல்பாட்டை தீர்மானிக்க உதவும் Java Script இன் Library ஆகும். இதை jquery தளத்திலேயே கற்கலாம்.
இதை வீடியோ Tutorials ஆக முப்பது நாளில் படிக்க 30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்.

6. HTML Code Tutorial - http://www.htmlcodetutorial.com/
மிக அடிப்படையான மொழியான HTML -ஐ அடிப்படையில் இருந்து கற்க இது உதவுகிறது. அத்தோடு CSS ம் இங்கு படிக்க முடியும்.

7. HTML 5
இணையத்தின் எதிர்கால மொழி என்று சொல்லப்படும் HTML 5 பற்றி படிப்பது ஒவ்வொரு Web Developer-க்கும் பயனுள்ளது. அவற்றை W3Schools இலவசமாக கற்று தருகிறது, 

மற்ற சில தளங்கள்





இவை தவிர்த்து அனைத்து Web Development படிக்க மற்ற சில தளங்கள்:


Quackit -   Now -  https://html.com/


Web Developers Notes -
http://learn.appendto.com/

appendto - jQuery & Java Script -
http://www.webdesign.org/

(குறிப்பு- நாம் மேற்குறிப்பிட்ட தளங்களுக்குள் பிரவேசிக்க இணையத்தள முகவரிக்கு மேல் click செய்யவும்)

Popular Posts

Facebook

Blog Archive